சென்னை,அக்.12– கிராமப்புற மற்றும் நகர்ப்புற சந்தைகளில் தனி நபர்களுக்கும் சிறு வணிகங்களுக்கும் நம்பகமாகன வெளிப்படையான மற்றும் தொந்தரவில்லாத நிதித்தீர்வுகளுடன் சேவை வழங்க தங்கக் கடன் துறையில் செயல்படும் வைப்புத் தொகை பெறாத வங்கி சாரா நிதி நிறுவனமாகிய இன்டெல் மணி லிமிடெட் தலா ரூ.1000 முக மதிப்புள்ள தனது ஆறாவது பாதுகாக்கப்பட்ட மாற்ற இயலாத கடன் பத்திரங்களின் பொது வெளியீட்டை அறிவித்தது. இந்த வெளியீடு 13.10.2025 அன்று தொடங்கி 28.10.2025 அன்று முடிவடைகிறது. இந்த வெளியீட்டின் மூலம் திரப்பட்ட நிதி, சிறுதொழில் முனைவோர்களுக்கு கடன் வழங்குதல், நிதியளித்தல் ஆகியவை நாங்கள் இலக்காக கொண்டுள்ளோம். மற்றும் நிறுவனத்தின் கடன்களில் அசல் மற்றும் வட்டியைத் திருப்பித் செலுத்துதல், முன்கூட்டியே செலுத்துதல் மற்றும் பொது நிறுவன நோக்கங்களுக்காக இந்நிதி பயன்படுத்தப்படும் என இந்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி உமேஷ் மோகனன் தெரிவித்துள்ார்.
தொழில்துறை வளர்ச்சிக்கான புத்தாக்கத் திட்டம் அறிமுகம்
சென்னை,அக்.12- உலகளவில் மத்திய வங்கிகள் தங்கள் தங்க இருப்புகளை அதிகரித்து வரும் நிலையில் தொழிற்துறை மற்றும் முதலீட்டுப் பிரிவுகளில் வெள்ளியின் தேவை அதிகரித்து வருவதால், கோடக் மஹிந்திரா அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட், கோடக் தங்கம் வெள்ளி பாசிவ் (FOF) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் பொது சந்தாவுக்கு அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கி 20.10.2025 அன்று முடிவடைகிறது. இந்த புதுமையான நிதி, கோடக் கோல்ட் ஈ.டி.எஃப். மற்றும் கோடக் சில்வர் ஈ.டி.எஃப் அலகுகளில் முதலீடு செய்வதன் மூலம் நீண்ட கால மூலதனப் பெருக்கத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. இதன் மூலம் மனித சார்பு நீக்கப்படுகிறது. இந்த மாதிரி மாற்றங்களைப் பிடிக்க டைனமிக் மறு சமநிலையைக் கொண்டுள்ளது. இது விலையுயர்ந்த உலோகங்கள் சந்தையில் ஒழுக்கமான மற்றும் தரவு சார்ந்த பங்கேற்ப்பை உறுதி செய்கிறது என இந்நிறுவன மேலாண் இயக்குநர் நிமேஷ் ஷா தெரிவித்துள்ளார்.