முதலமைச்சர் அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளுக்கு வைக்கப்பட்டுள்ள ஜாதிப் பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டுதலை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கிராமங்கள், குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளுக்கு உள்ள ஜாதிப் பெயர்களை நீக்க அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. ஆதி திராவிடர் காலனி, அரிஜன் குடியிருப்பு, வண்ணான்குளம் போன்ற பெயர்களைத் தவிர்க்கப்பட வேண்டும்.
பறையர் தெரு, சக்கிலியர் சாலை போன்ற பெயர்களை நீக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தெருக்கள் மற்றும் சாலைகளுக்கு திருவள்ளூவர், கபிலர், பாரதியார், பாரதிதாசன், தந்தை பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் பெயர்களையும், குளம் மற்றும் நீர் நிலைகளுக்கு ரோஜா, மல்லி, முல்லை ஆகிய பூக்களின் பெயர்களை வைக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜாதிப்பெயர்களை நீக்குதல், புதிய பெயரிடும் பணிகளை நவம்பர் 19ஆம் தேதிக்குள் முடிக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
‘திராவிட மாடல்’ அரசின் வரவேற்கத்தக்க ஆணை ஊர்களின் பெயர் பின்னால் வரும் ஜாதிப் பெயர்களை நீக்குக அரசாணை வெளியீடு
Leave a Comment