கூட்டுறவு சங்கங்களின் சென்னை மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தின் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங் களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவ தற்காக சென்னை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் கடந்த ஆகஸ்டு 6ஆம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதற்கான எழுத்துத் தேர்வு வருகிற 11ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
இத்தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை (ஹால் டிக்கெட்) 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் சென்னை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் www.drbchn.in என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு [email protected] என்ற மின்னஞ்சல் மற்றும் 044 – 24614289 என்ற தொலைப்பேசி எண் ணையும் தொடர்பு கொள்ளலாம்.
சென்னை மாவட்ட கூட்டுறவு சங்க உதவியாளர் பணியிடங்களுக்கு 11ஆம் தேதி எழுத்துத் தேர்வு

Leave a Comment