இதில் நடைபாதை கோயில்களும் அடங்குமா?
சென்னை, அக்.7- சென்னையில் சாலையோரம் ஆக்கிரமித்து அமைக் கப்பட்ட கடைகளை அகற்றுவதற்கான உத்தரவு மாநகராட்சி ஆணையரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் சாலையோர நடை பாதைகளில் தற்காலிக மாக புத்தகம், பொம்மைகள், காலணிகள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை தள்ளு வண்டிகள் மற்றும் நிரந்தர கடை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். அந்த ஆக்கிரமிப் புகளை அகற்றும் பணியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஈடுபடவேண்டும். ஆக்கிரமிப்பு அகற்றுதல் குறித்து மாநகராட்சியின் செயலியில் பதிவிடவேண்டும். உதவி பொறியாளர்கள் அளவிலான அலுவலர்கள் ஆக்கிரமிப்பு அகற்றுதலுக் குறிய அறிவிக்கையை விதிமுறைகளை பின்பற்றி அனுப்பவேண்டும். மக்கள் உள்ள பகுதி, அதிக மக்கள் உள்ள பகுதி என பிரித்து ஆக்கிரமிப்பு அகற்றப்படவேண்டும். காவல்துறையினர் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும்போது தேவையான லாரிகள், ஊழியர்களை பயன்படுத்த வேண்டும். ஆக்கிரமிப்பில் ஈடுபடும்போது தலைக்கவசம், ஒளிரும் உடை, கையுறைகள்அணிந்திருப்பது அவசியம். அவர்களுக்கான முதலுதவிப்பெட்டி மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றலுக்கான சாதனங்கள் கையுறை வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 9 மாதங்களில் சைபர் மோசடி கும்பலிடம் இருந்து ரூபாய் 21.69 கோடி மீட்பு
சென்னை, அக்.7 சென்னையில் கடந்த 9 மாதங்களில் பல்வேறு சைபர் குற்றங்களில் பொதுமக்கள் இழந்த ரூ.21.69 கோடியை சைபர் க்ரைம் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
சென்னை காவல் துறையின் சைபர் க்ரைம் பிரிவு காவல்துறையினர் சைபர் குற்றங்களில் பொதுமக்கள் இழந்த பணத்தை மீட்டு கொடுப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக, இணைய வழி மூலமாக பல்வேறு சமூக ஊடக பதிவு, தரவுகள் மூலம் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் சைபர் குற்றவாளிகளின் உரிய தொடர்புகளை கண்டறிந்து வங்கி கணக்குகளை முடக்குகின்றனர். பின்னர், அந்த பணத்தை மீட்கின்றனர். அந்த வகையில், சைபர் மோசடி கும்பலால் பறிக்கப்பட்ட பணம், இந்தாண்டு ஜன. 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான 9 மாதங்களில் ரூ.21.69 கோடி மீட்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.