சென்னை, அக். 6– சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டை யொட்டி வலைதளப் பதிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘‘திடலின் சிந்தனைகளுக்குச் செயல்வடிவம் கொடுக்க அறிவாலயம் பணியாற்றும்! நூறாண்டு கண்ட சுயமரியாதை இயக்கத்தின் ஆட்சி அதிகார நீட்சியான ‘திராவிட மாடல்’ தொடரும்!’’ என்று குறிப்பிட்டார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வலைதளப் பதிவு வருமாறு:
நமது ஒட்டுமொத்தப் போராட்டத்தையும் ஒற்றைச் சொல்லில் அடையாளப்படுத்த வேண்டும்என்றால், அதுதான் சுயமரியாதை!
அந்த உணர்வை நம்முள் விதைத்து, மானமும் அறிவும் உள்ள மக்களாக நம்மை மாற்றிய தந்தை பெரியாருக்காகத் திருச்சி சிறுகனூரில் அமையும்பெரியார் உலகத்துக்குத் தி.மு.க.வின் அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்குவோம்!
மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களே… உங்கள் பணிகளை நாங்களும்பகிர்ந்து கொள்கிறோம்!
திடலின் சிந்தனைகளுக்குச் செயல்வடிவம் கொடுக்க அறிவாலயம் பணி யாற்றும்! நூறாண்டு கண்ட சுயமரியாதை இயக்கத்தின் ஆட்சி அதிகார நீட்சியான ‘திராவிட மாடல்’ தொடரும்!
இவ்வாறு அப்பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.