வெட்டிக்காடு, அக். 6- வெட்டிக்காடு பெரி யார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 26.9.2025 அன்று மாணவ மாணவியரின் பெற்றோர்களை முதல்வர் வரவழைத்து பெற்றோர்களின் முன்னிலையில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
8.9.2025 அன்று திருச்சி அண்ணா வளாகத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான முதல்வர் கோப்பை போட்டியில் பங்கு பெற்று மாநில அளவில் விளையாடு வதற்கு தேர்வாகியுள்ள இரு மாணவிகளின் பெற்றோரும், 23.9.2025 அன்று தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஜூடோ விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்று மாநில அளவில் விளையாடுவதற்கு தேர்வாகியுள்ள 10 மாணவர்களின் பெற்றோர்களும் மேலும் இப்போட்டியில் இரண்டு மற்றும் மூன்றாம் பரிசு பெற்ற 16 மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். விழாவினை காலை 10.30 மணி அளவில் பள்ளி முதல்வர் சு.சாந்தி தொடங்கி வைத்தார்.
விழாவில் உடற் கல்வி ஆசிரியை மா. நித்யா வெற்றி பெற்ற மாண வர்களின் திறமைகளையும் அவர்களுக்கு அளிக்கப் பட்ட பயிற்சிகளையும் மாணவர்களின் திறமைகளை மேன்மேலும் வளர்க்க பள்ளியின் சார்பில் அளிக்கப்படும் பயிற்சிகளையும், பெற் றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை அளிக்க வேண்டும் என்றும், குழந்தைகளை ஊக்குவித்து வெற்றியடைய வழிகாட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
சிலம்பம் ஆசிரியர் பிரியதர்ஷன் பேசுகையில் ஜூடோ போட்டியில் மாணவர்கள் மாநில அளவில் வெற்றி பெற்றால் உயர் கல்வி கற்கும் போது அவர்களுக்கு கிடைக்கும் கட்டண சலுகை மற்றும் இட ஒதுக்கீடு பற்றியும் மேலும் விளையாட்டால் கிடைக்கும் சில நன்மை களை பற்றியும் விளக்கி கூறினார்.
நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பு மாணவியின் பெற்றோர் உடற்கல்வி ஆசிரியை நித்யாவிற்கும் சிலம்பம் ஆசிரியர் பிரியதர்ஷனுக்கும் பயனாடை அணிவித்து பாராட்டி புகழ்ந்து பேசினர். மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் பதக்கம் அணிவித்து சான்றிதழ்களை பரிசாக அளித்தனர்.
இறுதியில் பள்ளி முதல்வர் மாணவ்ர்களை பாராட்டியும் பெற்றோர்களை நம் பள்ளிக்கு ஆதரவாகவும் பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பரிசு பெற்ற மாணவர் களின் பெற்றோர்கள் அனைவரும் மனமகிழ்ந்து இனிவரும் காலங்களில் விளையாட்டின் முக்கியத்துவத்தையும் அதனால் அரசிடம் பெரும் சலுகைகளையும் அறிந்து கொண்டதன் பேரில் இனிவரும் காலங்களில் பள்ளி நிர்வாகத்திற்கு உறுதுணையாக இருப்போம் என்று உறுதி அளித்தனர். பாராட்டு விழாவின் இறுதியில் பெற்றோர்களுக்கு தேநீர் வழங்கி இனிதே நிறைவு பெற்றது.