புதுடில்லி, அக். 5 காசோலை தொடர்பான பண பரிவர்த்தனை ஒரு சில மணி நேரத்தில் முடிக்கப் பட்டு பயனாளிகளுக்கு பணம் விரைவில் வழங்கும் புதிய நடைமுறை நேற்று (4.10.2025) முதல் அமலுக்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதற்கான சோதனை முயற்சிகள் நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் 3.10.2025 அன்று மேற்கொள்ளப் பட்டன.
இந்த புதிய விதிகள் மூலம் வங்கிக ளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை டெபாசிட் செய்யப்படும் காசோலை கள் ஸ்கேன் செய்யப்பட்டு உடனடியாக பரிசீலிக்கப்பட்டு 1 மணி நேரத்தில் பய னாளிகள் வங்கிக் கணக்கில் பணம் செலுத் தப்படும்.
டெபாசிட் செய்த காசோலை களை வங்கிகள் மாலை 7 மணிக்குள் பரி சீலிக்க வேண்டும் என புதிய விதிமுறை களில் கூறப்பட்டுள்ளது.