டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* கரூர் துயரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு உண்மையை வெளிக்கொண்டு வரும்: முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி
* “திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாது” என்று சொன்ன பழனிசாமியின் அதிமுகவும், மீண்டும் கபளீகரம் செய்யலாம் என்று பார்க்கிறார்கள்’ என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பீகார் வாக்காளர் பட்டியல் குளறுபடி விவகாரம்; சில தொகுதிகளில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் வெற்றி வித்தியாசங்களை விட நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* நெடுஞ்சாலைகளில் நடத்துவதற்கு நீதிமன்ற தடை எதிரொலி எடப்பாடி பிரச்சாரம் திடீர் ரத்து: பொதுக்கூட்டங்களாக மாற்றி நடத்த திட்டம்
தி இந்து:
* பீகார் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த ஆளும் அய்க்கிய ஜனதா தளம் கோரிக்கை; இரண்டு கட்டங்களாக நடத்த வேண்டும் என பாஜக வேண்டுகோள்.வாக்காளர்களின் எண்ணிக்கையை மேம்படுத்த சாத் பண்டிகைக்குப் பிறகு உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கட்சிகள் கோருகின்றன
* தெலங்கானாவின் ஓபிசி ஒதுக்கீட்டை 42 விழுக்காடு ஆகவும், உள்ளாட்சி அமைப்புகளில் மொத்த இடஒதுக்கீட்டை 67% ஆகவும் உயர்த்தியதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
* ஜப்பானின் முதல் பெண் பிரதமராகிறார் சனே தகைச்சி: ஜப்பானின் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவராக தேர்வாகி உள்ள சனே தகைச்சி, இம்மாத மத்தியில் அந்நாட்டுப் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
* கும்பகோணம் கலைஞர் பல்கலைக்கழக மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது. ஆளுநரின் நடவடிக்கை சட்டப்பேரவை முடிவுக்கு எதிரானது எனவும், இதில் உச்சநீதிமன்றம் தலையிட்டு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
தி டெலிகிராப்:
* உ.பி. சமாஜ்வாடி கட்சி தலைவர்கள் வீட்டுக் காவல்: பொதுமக்களுக்கு எதிரான காவல்துறை தலைமையிலான வன்முறை குறித்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதால், உயர்மட்ட எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட சமாஜ்வாடி கட்சித் தலைவர்கள் பரேலிக்குச் செல்வதைத் தடுத்து நிறுத்தியுள்ளது யோகி அரசு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* சிவில் சர்வீஸ் தேர்வுகள் நடத்தும் யு.பி.எஸ்.சி., எனும் மத்திய பணியாளர் தேர்வாணையம், முதல் நிலை தேர்வுகள் முடிந்த பின், உத்தேச விடைக்குறிப்புகளை வெளியிட முடிவு செய்து உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. மாணவர்களின் கோரிக்கைகளுக்கு இணங்கி இந்த முடிவு.
– குடந்தை கருணா