செங்கை மறைமலை நகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, வடசென்னை திராவிடர் கழகம் சார்பில் கடை வீதி வசூல் நடைபெற்றது.
அக்.3 அன்று வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புசெல்வன் தலைமையில் புரசைவாக்கம் பகுதியில் கடை வீதி வசூல் நடைபெற்றது. வடசென்னை மாவட்டத் தலைவர் தளபதி பாண்டியன், மாவட்ட காப்பாளர் கி.இராமலிங்கம், மாவட்ட அமைப்பாளர் சி.பாஸ்கர், எர்ணாவூர் இரா.சரவணன், அரும்பாக்கம் சா.தாமோதரன், வடசென்னை இளைஞர் அணி செயலாளர் ஓட்டேரி ந.கார்த்திக், வட சென்னை மாவட்ட இளைஞரணி துணை செயலாலர் த.பரிதின், கலைமணி உள்ளிட்ட தோழர்கள் கலந்துக் கொண்டனர்.