பெரியார் குயில், தாராபுரம்
உலகில் தோன்றிய இயக்கங்களில் தனக்கான இலக்கை நோக்கி பயணிப்பதற்கு முன்பாக தனக்கான ஒழுங்கை கட்டுப்பாட்டை கடைபிடித்த ஒரு இயக்கம் திராவிட இயக்கம் மட்டுமே.
போராட்டக் களங்கள் பொதுக்கூட்டங்கள் மாநாடுகள் என அனைத்திலும் ஓர் ஒழுங்கை விதைத்து எழுந்த இயக்கம்!
இன்றுவரை அந்த அச்சிலிருந்து மாறாமல் பயணிக்கும் திராவிட இயக்க மாநாடுகள் பெரும் உண்மைகளைக் கூறிச் செல்கின்றன.
வருவாய்க் குறைவான 1960-80களில் நடைபெற்ற மாநாடுகள் மிகுந்த வியப்பைத் தருகின்றன!
இரண்டு நாள் மாநாடுகள் ஓரிடத்திலே கூட்டப்படும். மாநாட்டிற்கு வருகை தரும் தோழர்கள் தங்களது குடும்பம் முழுவதையும் அழைத்து வந்து விடுவார்கள். எத்தனை;g பேருந்துகள் மாறினோம் என்ற கவலை கொள்ளாமல். மாநாட்டுத் திடலை அடைவதும், 100 கல் தொலைவை சாதாரணமாக மிதிவண்டியில் கடந்து வந்து திராவிட இயக்கத் தலைவர்களின் பேச்சை கருத்தோடு உள்வாங்கிக் கொள்வதும், பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருக்கும் தோழர்களோடு கலந்துறவாடுவது என்துமே எதிர்பார்ப்பு.
ஆங்காங்கே குழந்தைகள் மாநாட்டுப் பந்தலில் தொட்டிலில் தூங்கும், தாய் சமைப்பார்., தந்தை பாத்திரம் கழுவுவார் என பல்வேறு காட்சிகள் காணக் கிடைக்கும். வீட்டிலிருந்து கட்டிக் கொண்டு வந்த உணவை கழகக் குடும்பங்கள் பகிர்ந்து உண்ணும் காட்சிகள் கண் கொள்ளாக் காட்சி!
மாலை நேர இசைக் கச்சேரிகளும் நாடகங்களும் வெட்டுக்காய் ஆட்டங்களும் தனிசுகத்தைத் தந்த காலமது!
வேரோடிப் போன சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா., வருகிற 4-ஆம் தேதி மறைமலை நகரில். அழைக்கிறார் தமிழர் தலைவர்! வருகிறார் திராவிட நாயகர்!!