ஆத்தூர் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

ஆத்தூர், அக். 2– பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 147 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஆத்தூர் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி 29.09.2025 திங்கட்கிழமை காலை 10:30 மணி அளவில் வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கலை-அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஆத்தூர் திராவிடர் கழகத்தின் மாவட் டத் தலைவர் அ.சுரேஷ் தலைமையேற்று தலைமை உரை ஆற்றினார். ஆத்தூர் பகுத் தறிவாளர் கழகத்தின் மாவட்டத் தலைவர் வ.முருகானந்தம் வர வேற்புரை ஆற்றினார். மாவட்டக் காப்பாளர் விடுதலைச் சந்திரன் வாழ்த்துரை வழங்கினார். பகுத்தறிவாளர்கழக ஆத்தூர் நகரத் தலைவர் முனைவர் கு பிரகாஷ், தமிழ்த் துறை பேராசிரியர் முனைவர் வசந்தா அம்மா முன்னிலை வகித்தனர். பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில அமைப்பாளர் இரா.மாயக்கண்ணன் தொகுப்புரை வழங்கினார்.

பேச்சுப் போட்டியின் நடுவர்களாக ப.க. மாவட்டத் தலைவர் வ. முருகானந்தம், ப.க. நகரத் தலைவர் முனைவர் கு. பிரகாஷ், தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் வசந்தா ஆகியோர் நடுவர்களாக செயல் பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் ஆத்தூர் வட சென்னிமலை கலை-அறிவியல் கல்லூரி மாணவர்களும், தேவியா குறிச்சி பாரதியார் மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவர்களும், மணிவிழந்தான் பாவேந்தர் கல்வியியல் கல்லூரி மாணவர்களும், தாகூர் பொறியியல் கல்லூரி மாணவர்களும் என 35 மாணவர்கள் மொத்தம் கலந்து கொண்டனர். அதில் 25 பெண்களும் 10 ஆண்களும் போட்டியில் கலந்து கொண்டனர். பார்வையாளர்களாக அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் பெருந்திரளாக கலந்து கொண் டனர்.

பேச்சுப் போட்டிக்கான தலைப்புகளாக 1.பெரியாருக்கு முன்னும் பெரியாருக்குப் பின்னும் 2. பெரியார் ஓர் கேள்விக்குறி? ஒரு ஆச்சரியக்குறி? 3.எப்போதும் தேவை பெரியார் 4 இட ஒதுக்கீடு ஜாதி ஒழிப்பு பெண்ணுரிமை 5 நம்மை எதிர்நோக்கும் பிரச்சினைகள் 6. பெரியார் இல்லாவிடில் இன்றும் நாளையும் நம் நிலை இதில் ஏதாவது ஒரு தலைப்பின் கீழ் 5 நிமிடம் பேச அனுமதி வழங்கப்பட்டது.

மாணவர்கள் தந்தை பெரியாரால் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் கிடைக்கப் பெற்று உயர் இடத்தில் இருப்பதை உன்னதமாக எடுத்துரைத்தனர். ‘பெரியார் என்கிற பேராளுமையாலே பெண்ணுரிமை பெற்று பெண்கள் வளர்ந்து இருக்கிறார்கள்’ என்பதையும், ‘ஜாதி ஒழிப்பு களத்திலே நின்று சமத்துவத்தை நிலை நாட்டிய தந்தை பெரியார் அவர்களாலேயே இன்றைக்கு தமிழ்நாடு தழைத்தோங்குகிறது’ என்கிற தகவல்களை அருமையாக எடுத்துரைத்தனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ 2000 ஆத்தூர் தந்தை பெரியார் அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது .இரண்டாம் பரிசுரூ1500 பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக வழங்கப்பட்டது. மூன்றாம் பரிசு ரூ 1000 பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் வா.தமிழ் பிரபாகரன் ஆகியோர் நன்கொடை வழங்கினர்.

முதல் பரிசு – ஜெ.ஹரிணி – அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வடசென்னிமலை.

இரண்டாம் பரிசு – கோ.ரேணுகா- பாவேந்தர் கல்வியில் கல்லூரி மணி விழுந்தான்.

மூன்றாம் பரிசு – க.செ.சுவேதா –  பாரதியார் மகளிர் கலை அறிவியல் கல்லூரி தேவியா குறிச்சி.

ஆறுதல் பரிசு 10பேர்- கே.விக்னேஷ்,ஆர்.பிரதீபா, ஜி. பிரகாஷ், ராமலிங்கம் செந்தமிழரசி ,தர்ஷனா, ராஜேஸ்வரி ,முகேஷ், கிருத்திகா ,அஞ்சலி ஆகியோர் பெற்றனர்

அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வடசென்னிமலை தமிழ்த் துறை தலைவர் முனைவர் முருகேசன் அவர்களும், தமிழ் துறை பேராசிரியர் வசந்த் அம்மா திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்களும் பரிசினை வழங்கினர்.

பின் கல்லூரியில் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் வா.தமிழ் பிரபாகரன் சான்றிதழ் வழங்கினார். நிறைவாக நன்றி உரை பகுத்தறிவாளர் கழகத்தி்ன் பிரகாஷ் நன்றியுரை ஆற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *