வேலூர் மாவட்ட மதிமுக மேனாள் மாவட்டச் செயலாளர் நா. சுப்பிரமணி மறைவுற்றார். ஒன்றுபட்ட வேலூர் மாவட்ட மறுமலர்ச்சி திமுக மேனாள் மாவட்டசெயலாளரும், வேலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தந்தை பெரியார் சிலையை நிறுவியருமான வேலூர் நா.சுப்பிரமணி உடல்நலக் குறைபாடு காரணமாக அவரது இல்லத்தில் நேற்றுறு (30.9.2025) காலை இயற்கை எய்தினார்.
சுயமரியாதைச் சுடரொளிக்கு திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் வீரவணக்கம் செலுத்தினர். அவர் பிரிவால் துயருற்று இருக்கும் அவர் குடும்பத்தார் மற்றும் இயக்க தோழர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.