மும்பை, செப்.29 மகாராட்டிரா வில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டித் தீர்ப்பதால், மாநிலம் முழுவதும் தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக மராத்வாடா பகுதி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப் பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.
சத்ரபதி சம்பாஜிநகர், பீட், நாந்தேட், பர்பானி, தாராஷிவ் உள்ளிட்ட மராத்வாடா மாவட் டங்களில் பலத்த மழை நீடித்து வருகிறது. சத்ரபதி சம்பாஜிநகரின் ஹர்சுல் பகுதியில் கடந்த 24 மணிநேரத்தில் 196 மி.மீ. மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.
இம்மாவட்டத்தில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால், பல்வேறு கிராமங்களுக்கான தரைவழிப் போக்குவரத்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
தாராஷிவ் மாவட்டத்தில் 27.9.2025 அன்று இருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந் துள்ளனர்.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து இதுவரை 11,000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் பாது காப்பாகத் தங்கவைக்கப்பட் டுள்ளனர். பல்வேறு அணைகள் நிரம்பி வழிவ தால், நீர் திறப்பு அதிகரிக்கப்பட் டுள்ளது. இத னால், கரையோர மக்கள் எச்ச ரிக்கையுடன் இருக்குமாறு அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட் டுள்ளது.
மராத்வாடா பகுதியில் ஏற் பட்டுள்ள மழைவெள்ள பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் ஞாயிற்றுக்கிழமை அவசர ஆலோசனை மேற்கொண்டார். கள நிலவரத்தைக் கேட்டறிந்த அவர், மீட்பு மற்றும் நிவா ரண நடவடிக்கைகளை விரைவுபடுத்து மாறு அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.