அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்
சென்னை, செப்.28 – ‘இந்தியாவில் பிற மாநிலங் களுக்கெல்லாம் வழிகாட்டி யாகவும், முன்னோடியாக வும் தமிழ்நாடு சுகாதாரத் துறை திகழ்ந்து வருகிறது’ என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப் பிரமணியன் தெரிவித் தார்.
சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல் கலைக்கழகத்தில் “பல்கலைக்கழக ஆராய்ச்சி நாள்- அறிவேள்வி 2025 விழா நடைபெற்றது. இதனை முன் னிட்டு. பல்வேறு கல்வி மற்றும் ஆராய்ச்சி தொடர் பான போட்டிகள் பல் கலைக்கழக இணைப்பு கல் லூரிகளுக்கு நடத்தப்பட் டன. அதில் ஹாக்கத்தான். குழந்தைகள் விநாடி – வினா, ஆராய்ச்சி கட்டுரை வாசிப்பு, மீம்ஸ் உருவாக்கம், ஜஸ்ட் எ மினிட் குறும்படம் ஆகியவை இடம்பெற்றன.
ஆராய்ச்சி புத்தகங்கள்
இந்த விழாவில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன், மருத்துவ ஆராய்ச்சி புத்தகங்களை வெளியிட்டார்.
தொடர்ந்து, போட்டி களில் வெற்றி பெற்ற மாணவர்கள், சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு சான்றிதழ்களையும் ஆசிரியர்கள், மாணவர்க ளுக்கு ஆராய்ச்சியாளர் விருதுகளையும் வழங்கி னார்.
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மருத்துவர் கே.நாராயணசாமி, பதிவா ளர் கி.சிவசங்கீதா, துறைத்தலை வர்கள், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்து வமனை, சென்னை மருத்துவக் கல்லூரி டீன் சாந்தா ராமன், மருத்துவ பேராசிரியர் கள் மற்றும் மாணவ மாணவிகள் பங்கேற்றனர். விழாவில் அமைச்சர் பேசியதாவது
முக்கிய மைல்கல்
தமிழ்நாடு சுகாதாரத் துறை என்பது இந்தியாவில் பிறமாநிலங்களுக்கெல் லாம் வழிகாட்டியாகவும், முன் னோடியாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த ஆண்டின் முக்கிய மைல்கல்லாக பல் கலைக்கழகத்தின் ஆராய்ச்சி தின விழாவில், மருத்துவம் மற்றும் பல்வேறு சுகாதார துறைகளின் மாணவர்களை இணைத்து செயல்பட்டது என்பது பல்துறை ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வித மாக மட்டுமல்லாமல், சிகிச்சை முறைகளில் உள்ள பிரச்சினைகளுக்கு நவீன தீர்வுகளை கண்டுபிடிக்க வழிவகுக்கும்.
புதிய திசையை காட்டும்
மருத்துவ ஆராய்ச்சி யில் மாணவர்களின் முனைப்பு என்பது, நாட்டின் மருத்து வத்தை மேம்படுத்தும் வித மாக செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட் பங்களை கையாள உதவும். இது தமிழ்நாடு மருத்துவத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு புதிய திசையை காட்டும் இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
ஆராய்ச்சி திறனை…
பல்கலைக்கழக துணை வேந்தர் மருத்துவர் கே.நாராயணசாமி பேசும்போது. “இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர் களின் ஆராய்ச்சி திறனை ஊக்கப்படுத்தும் வகையில், பல்கலைக்கழக வரலாற்றில் 3ஆவது முறையாக ஆராய்ச்சி நாள் விழா நடத்தப்பட்டுள் ளது. படைப்பு சிந்தனையை வளர்ப்பது. கற்றல், செயல் பாடு மற்றும் அறிவியல் உற்பத்தித் திறனை வளர்ப் பது, தொடர்பு திறன்களை வளர்ப்பது. சுகாதாரப் பராமரிப்பு தீர் வுகளை மேம்படுத்துதல் மற்றும் மருத்துவப் பயிற்சியை மேம்படுத்துதல், ஆசிரியர் வழிகாட்டிகளை வளப்படுத்துதல் போன் றவைகளுடன் இவ்விழா கொண்டாடப் பட்டது” என்றார்.