விண்ணில் இந்திய செயற்கைக்கோள்களுக்கு ஆபத்து 50 மெய்க்காப்பாளர் செயற்கைக் கோள்களை ஏவ இஸ்ரோ திட்டம்

1 Min Read

பெங்களூரு, செப்.26 விண்ணில் இந்திய செயற்கைகோள்களை பாதுகாக்கும் வகையில், 50 மெய்க்காப்பாளர் செயற்கைக்கோள்களை ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. பூமி சுற்றுப்பாதையில் 105 நாடுகளைச் சேர்ந்த 12,149 செயற்கைக்கோள்கள் இருப்பது பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவுக்கு சொந்தமான 56 செயற்கைக்கோள்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கடந்த ஆண்டு அண்டை நாட்டுக்கு சொந்தமான செயற்கைக்கோள் 1 கி.மீ. தொலைவில் இந்தியாவின் செயற்கைக்கோள் மீது மோதுவது போல் சென்றது. நல்வாய்ப்பாக ஒன்றும் ஆகவில்லை. இதன் காரணமாக விண்வெளியில் உள்ள இந்தியாவின் செயற்கைக்கோள்களை பாதுகாக்கும் திட்டம் ஒன்றை இந்தியா உருவாக்கி வருகிறது.

இந்த திட்டத்தின்படி, 50 மெய்க்காப்பாளர் செயற்கைக்கோள்களை உருவாக்கி பூமி சுற்றுப்பாதையில் சுற்றி வரும் செயற்கைக்கோள்களை பாதுகாக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்திய விண்வெளி பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக ரூ.27,000 கோடி திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மெய்க்காப்பாளர் செயற்கைக்கோள்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. அதிநவீன சென்சார்கள் பொருத்தப்பட்ட இந்த செயற்கைக்கோள்கள், சிக்னல் ஜாம்மிங், சைபர் தாக்குதல்கள், எதிரி செயற்கைக்கோள்களின் குறுக்கீடு போன்ற அபாயங்களை எதிர்கொள்வதை நோக்கமாக கொண்டுள்ளது. இவை அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட உள்ளது.

 

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *