ஜூன் 7 பள்ளிகள் திறப்பு

Viduthalai
1 Min Read

சென்னை, மே 26 கோடை விடுமுறைக்கு பிறகு தமிழ்நாட்டில் 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் ஒன்றாம் தேதியும்,  ஒன்றாம் வகுப்புமுதல் 5ஆம் வகுப்புகளுக்கு ஜூன் அய்ந்தாம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் வெப்ப அலை ஓய்ந்தாலும் தமிழ்நாட்டில் வெயில் தொடர்ந்து சுட்டெரித்துக் கொண்டு இருக்கிறது.

இதனால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்திருக்கிறது. 

இதுகுறித்து சென்னையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை நடத்தினார். அப்போது மாவட்டங்களில் நிலவும் வெயி லின் தாக்கம் குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்ததாகத் தெரிகிறது.

மேலும் ஒட்டுமொத்தமாக ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 7ஆம் தேதி பள்ளிகளை திறக்கலாம் என ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி யுள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் பள்ளிகள் ஜூன் 7 ஆம் தேதி திறக்கும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *