டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* பீகார் தேர்தலில், இந்தியா கூட்டணி சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி, காங்கிரஸ் ஆதரவு.
* பீகார் தேர்தலில் தெலங்கானா மாடலான பிற்படுத்தப் பட்டோருக்கு 42 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதியை முன்னிறுத்தி போட்டியிட காங்கிரஸ் திட்டம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
* லடாக் போராட்டம்; பாஜக அலுவலகம் தீ வைப்பு: லடாக்கிற்கு முழுமையான மாநில அந்தஸ்தும், இந்திய அரசியலமைப்பின் ஆறாம் அட்டவணையில் சேர்த்தலும் கோரி லேவில் பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. போராட்டம் வன்முறையாக மாறி, காவல்துறையினருடன் மோதல்கள் நடந்ததுடன் பாஜக அலுவலகம் தீவைக்கப்பட்டது.
* விஜய் வருமான வரி அபராத வழக்கு: நடிகர்-அரசியல்வாதி விஜய்க்கு விதிக்கப்பட்ட ரூ.1.5 கோடி அபராதம் சட்டபூர்வமான காலக்கெடுவுக்குள் வழங்கப்பட்டது என்று வருமான வரித்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தி இந்து:
* பீகார் EBC காப்பு சட்டம்: இந்தியா கூட்டணி (INDIA BLOC) பீகாரில் மிகப் பின்தங்கியோர் (EBC) மீது நடைபெறும் அத்துமீறல்களுக்கு எதிராக, எஸ்சி, எஸ்டி தடுப்பு சட்டம் போன்று ஒரு சிறப்பு சட்டம் கொண்டு வருவதாக உறுதி அளித்துள்ளது.
* மகாராட்டிரா மொழிக் குழு: மாநில மொழி ஆலோசனைக்குழு, மூன்று மொழிக் கொள்கை அமல்படுத்தும் நரேந்திர ஜாதவ் குழுவை கலைக்க தீர்மானம் நிறைவேற்றியது.
* யுஜிசி பாடத்திட்டம்: வரலாற்றாளர் ரோமிலா தாப்பர், யுஜிசி-யின் புதிய பாடத்திட்ட வரைவு பல்கலைக்கழக சுயாட்சிக்குள் தலையீடு செய்து, கல்வித் தரத்தை சீர்குலைக்கும் எனக்
கண்டனம்.
தி டெலிகிராப்:
* ராகுல் காந்தி விமர்சனம்: காந்தி நகரின் பேடாபூர் குடிசைப்பகுதியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வீடுகள் “அனுமதியற்றது” என கூறி இடிக்கப்பட்டதை குறிப்பிடும் ராகுல் காந்தி, “ஏழைகளுக்கு புல்டோசர், அதானிக்கு நிலம்” என பாஜகவை தாக்கி விமர்சனம்.
– குடந்தை கருணா