புதுடில்லி, செப்.25 உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், ‘‘புல்டோசர் நடவடிக்கை’’ குறித்துத் தான் அளித்த தீர்ப்பு தனக்கு பெரும் திருப்தியை அளித்ததாகத் தெரி வித்துள்ளார்.
பாஜக ஆளும் வட மாநிலங்க ளில் குற்ற வழக்குகளில் தொடர்பு டையவர்கள், சட்ட விரோத ஆக்கி ரமிப்பு உள்ளிட்டவற்றைக் காரணம் காட்டி எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், மாநகராட்சிகளால் வீடுகள் இடிக்கப்பட்டு வந்தன. குறிப்பாக இஸ்லாமியர்களின் வீடுகள் குறிவைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதற்கிடையே 2024 நவம்பர் 13 அன்று, நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, புல்டோசர் நடவடிக்கை சட்ட பூர்வமானது அல்ல என்று தீர்ப்ப ளித்து அதற்கு நாடு தழுவிய வழிகாட்டுதல்களை வகுத்தது.
இந்நிலையில் உச்சநீதிமன்ற வழக்குரைஞர்களின் கல்விக்குழு ஏற்பாடு செய்த பாராட்டு விழா வில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பேசுகையில், “அந்தத் தீர்ப்பின் மய்யத்தில் மனிதத்தின் பிரச்சினைகள் இருந்தன. ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவர் குற்றவாளி அல்லது குற்றம் சாட்டப்பட்டவர் என்பதற்காக, ஒட்டுமொத்தக் குடும்பமும் துன்பு றுத்தப்படுவதுதான் அந்த வழக்கில் இருந்த முக்கியப் பிரச்சினை.
இந்தத் தீர்ப்பின் பெருமை எனக்கு அளிக்கப்பட்டாலும், அதற்கு இணையான பங்கு நீதிபதி விஸ்வநாதனுக்கும் உண்டு” என்று தெரிவித்தார்.
மேலும், நாடு முழுவதும் நீதித்துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், உயர்நீதி மன்றங்களில் நீதிபதிகள் நியம னத்தை விரைவுபடுத்துவதற்கும் தாம் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.