அமெரிக்கா- ஹர்ண்டன் நகரில் நூலக கருத்தரங்கக் கூடத்தில் 20.9.2025 அன்று மாலை 2.30 மணி முதல் 5 .30 மணி வரை பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் அமெரிக்க தி.மு.க. அயலக அணி சார்பில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்தநாள் முப்பெரும் விழாவாக நடைபெற்றது.
திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் சிறப்புரை ஆற்றினார். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா சமுதாயப் பணிகளையும் தொண்டின் கனிவையும் தமிழ் மக்கள் பெற்ற பயனையும் விளக்குவதாக உரை அமைந்தது.
மேனாள் வடஅமெரிக்க தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் அரசு செல்லையா, அமெரிக்க தி.மு.க. அயலக அணி (மத்திய பகுதி) நியூ ஜெர்சி பாலா, நியூ ஜெர்சி ரவி பெருமாள் சாமி ஆகியோர் அறிஞர் அண்ணா பற்றியும் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் பற்றியும் திராவிட மாடல் ஆட்சியின் மாட்சி பற்றியும் சாதனைகளை விளக்கியும் சிறப்புரை ஆற்றினர்.
நிகழ்ச்சியை பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தைச் சேர்ந்த கவிஞர் ம.வீ. கனிமொழி தொகுத்து வழங்கி இணைப்புரை ஆற்றினார். நிகழ்வில் பெரியார் பிஞ்சுகள் இனியா, இலக்கியா, ஜாய், எயினி, இலக்கணன், பிரியா, வாசிங்டன் வட்டார தமிழ்ச் சங்கத்தின் இயக்குநர் எழில் வடிவன், அறிவுப்பொன்னி, மேரி பொன்முடி, சுந்தரி, ஜனனி, சவிதா, கலைச்செல்வி, அழகர் மோகன்ராஜ் கிரானின் ஸ்டாலின் கமலக்கண்ணன், யோகராஜ், சுபாஷ், பிரபாகரன், செல்வராஜ் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர்.
அமெரிக்காவில் ‘பெரியார் -அம்பேத்கர் படிப்பு வட்டம்’ நடத்திய பெரியார்- அண்ணா விழா! முனைவர் அரசு செல்லையா, கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் சிறப்புரை!

Leave a Comment