லண்டன், செப்.21– அய்ரோப்பிய நாடுகளில் உள்ள முக்கிய விமான நிலையங்கள் மீது இன்று பெரிய அளவிலான சைபர் தாக்குதல்கள் அரங்கேறி உள்ளன. இதனால் பல நாடுகளிலும் விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த சைபர் தாக்குதல், விமான நிலையங்களின் சேவை வழங்கும் அமைப்புகளை குறிவைத்துள்ளது. குறிப்பாக, பயணிகளின் செக்-இன் மற்றும் போர்டிங் போன்ற முக்கியமான சேவைகளில் முடக்கம் ஏற்பட்டது. லண்டன், ஹீத்ரோ, பிரஸ்ஸல்ஸ், பெர்லின் போன்ற முக்கிய விமான நிலையங்கள் இந்தத் தாக்குதலுக்கு ஆளாகின.
பல விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவ தால் பயணிகள் விமான நிலையங்களில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பல் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த சைபர் தாக்கு தல் காரணமாக, விமா னங்களின் வருகை மற்றும் புறப்பாடு பெரிதளவில் பாதிக்கப்பட்டதாக பன்னாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தொழில்நுட்ப நிபுணர்கள் பிரச்னையை தீர்க்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே விமான நிலையங்களுக்கு வந்துள்ள பயணிகளுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.