பாபநாசம், செப். 20- கும்பகோணம் கழக மாவட்டம், பாபநாசம் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 13.9.2025 அன்று மாலை 6 மணி அளவில் பாபநாசம் பட்டுக் கோட்டை அழகிரி ஆட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஒன்றிய கழகத் தலைவர் தங்க. பூவானந்தம் தலைமையற்றார். வருகை தந்த அனைவரையும் ஒன்றிய கழக செயலாளர் சு.கலியமூர்த்தி வரவேற்றார். கூட்டத்தின் நோக்கம் பற்றி தலைவர் தன்னுடைய முன்னுரை குறிப்பிட்டு தோழர்கள் கருத்துகளை பதிவு செய்ய வேண்டினார்.
கோட்டச்சேரி கஜேந்திரன், வழுத்தூர் அம்ஜத்வர்ஷன், குடந்தை ரியாஸ் அகமது,, மாவட்ட மகளிரணி திரிபுர சுந்தரி, பாபநாசம் நகர கழக தலைவர் வீரமணி செயலா ளர் இளங்கோவன் நகர அமைப்பாளர் கணேசன், அறக்கட்டளை வரதராஜன், கல்வி ஒன்றிய பொறுப்பாளர் ராஜகிரி ஜனார்த்தன், பாபநாசம் நகர கழக துணைச் செயலாளர் மதிவாணன், நகர துணைத் தலைவர் நாகராஜன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஏகாந்த லெனின், மாவட்ட கழக தொழிலாளர் அணி செயலாளர் பெரியார் கண்ணன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் க.திருஞான சம்பந்தம், தஞ்சை பேரா.மணி மேகலை, மாவட்ட கழக செயலாளர் சு.துரைராசு, மாவட்ட கழக தலைவர் கு.நிம்மதி ஆகியோர் உரையாற்றினார்கள்.
தொடர்ந்து தஞ்சை மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வி. மோகன் ஆகியோர் இயக்க செயல்பாடுகள் பற்றியும், பொறுப்பாளர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றியும் நமக்கு இயக்கம் தான் அடையாளம் என்பதையும் எடுத்துக்கூறினார்கள்.
இறுதியாக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் இயக்கம், அதன் பெருமை, செயல்பாடுகள், கட்டுப்பாடு எனபதையெல்லம் எடுத்துக்கூறி, இந்த இயக்கத்தில் இந்த ஒன்றியத்தின் பெருமை, சிறப்புகளையெல்லாம் எடுத்துக்கூறினார்.
தொடர்ந்து விடுதலை, உண்மை சந்தா சேர்ப்பது, பெரியார் உலகம் நிதி திரட்டுவது பற்றியும் ஆசிரியர் அவர்களின் எதிர்பார்ப்பு என்ன என்பது பற்றியும் உரையாற்றினர்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட பொருள் பற்றி விவாதிக்கப்பட்டு தீர்மானங்களாக ஏற்றுக்கொள்ள ப்பட்டது.
10.09.2025 அன்று பாபநாசம் பெரியார் பெருந்தொண்டர் தி.ம.நாகராசன் மறைவுக்கு இக்கூட்டம் தனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. தொடர்ந்து இரு நிமிடம் அமைதி காக்கப்பட்டது.
செங்கல்பட்டு மறைமலைந கரில் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி நடைபெறும் சுயமரி யாதை இயக்க நூற்றாண்டு விழாவில் பெருமளவில் கலந்து கொள்வதென தீர்மானிக் கப்பட்டது.
திருச்சி சிறுகனூரில் அமைக் கப்படும் பெரியார் உலகம் திட்டத்திற்கு 08.09.2025 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களிடம் நேரடியாக ரூபாய் 5 லட்சம் நன்கொடையாக கொடுத்த நன்கொடையர்களுக்கு நன்றியையும், மேற்கொண்டு பெரும் அளவில் நன்கொடை வசூல் செய்து கொடுக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்படுகிறது
பாபநாசம் வருகைதந்த ஆசிரியர் அவர்களை சிறப்பாக வரவேற்ற பாபநாசம் நகர அமைப்பாளர் கணேசனுக்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் கூட்டம் தெரிவிக்கிறது.
இறுதியில் தொழிலாளர் அணி செயலாளர் பெரியார் கண்ணன் நன்றி கூறிட கூட்டம் முடிவுற்றது.