சென்னை, செப்.20- பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் என அனைத்து பொது போக்குவரத்து வாகன பயணத் துக்கும் பயணச்சீட்டு பெறக் கூடிய செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செப் 22ஆம் தேதி அறி முகம் செய்து வைக்கிரார்.
பயணச்சீட்டு
இதுகுறித்து போக்கு வரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னை முழுவதும் இயங் கும் பேருந்துகளில் மக்களே உங்க கிட்ட ஒன்னு சொல்லனும். இப்ப இல்ல, சீக்கிரம் சொல்றேன் என்ற விளம்பரத்தை பலரும் பார்த்தி ருக்கலாம். அனைத்து பொதுப் போக்குவரத்துக்கான பயணச் சீட்டை வழங்கும் செயலிக்கான விளம் பரம்தான் இது. ‘அண்ணா செயலி (சென்னை ஒன்) என்ற பெயரில் சோதனை முறையில் தற்போது செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இந்த செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் செப்.22ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளார். பயணச்சீட்டை வழங்குவது மட்டுமின்றி, பயணத்தை முழு மையாக திட்டமிடும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட் டுள்ளது. புறப்படும் இடம், செல்லும் இடத்தை பதிவு செய்தால், அதை அடைவதற்கான வாக னங்கள், அதற்கான கட்டணம், செல்ல வேண்டிய நிறுத்தங்கள், நடக்க வேண்டிய தூரம் என அனைத் தையும் செயலி தெரிவிக்கும். பின்னர், கட்டணத்தை செலுத்தி தடையின்றி பயணிக்க முடியும். பேருந்து இருக்கைகளில் செயலிக்கான குறியீடு ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. அதை ஸ்கேன் செய்தும் பயணச்சீட்டை பெறலாம். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுபற்றி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஸ்டாப் கரப்ஷன் தொழிற்சங்க பேரவை நிர்வாகி ம.அன்பழகன் கூறும் போது, “இது வரவேற்கத்தக்க அம்சம். பேருந்தில் ஏறுவதற்கு முன்பே பயணிகள் தயாராக பயணச்சீட்டுடன் வருவதால், அதை உறுதி செய்வது மட் டுமே நடத்துநர்களின் வேலை யாக இருக்கும். இதன்மூலம் சில்லறை பிரச்சினை தீரும். ஆனால், பேருந்தில் ஏறிய பிறகு சில நேரம் சர்வர். நெட் வொர்க் பிரச்சினை இருக்கிறது. இதில் கவனம் செலுத்த வேண் டியது அவசியம். இல்லாவிட் டால், தேவையற்ற பிரச்சினைகள் எழக்கூடும்” என்றார்.
போக்குவரத்து ஆர்வலர் வின் ஸ்டன் கூறும்போது, “செயலியில் வழங்கப்பட்டிருக்கும் வசதிகள் வரவேற்பத்தக் கவை. அதேநேரம், ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு பயணிக்க அடுத் தடுத்து பல்வேறு வாகனங்களை பயன்படுத்துவது விரை வாக செல்வோருக்கு பயனளிக்கும். ஆனால், நேரம் சற்று கூடுத லாக இருந்தாலும் குறைந்த செலவில் செல்லக்கூடிய பயண வாய்ப்புகளையும் தெரிவிக்கும் வசதியும் தேவை அப்போதுதான், நடுத்தர மக்களுக்கும் பயன் தரும் படியாக பயண அட்டைகளை பயன்படுத்தும் வசதியையும் அறிமுகம் செய்ய வேண்டும்” என்றார்.