அமெரிக்கர்களுக்கான வேலையில் போட்டியை தடுக்கவும், அயல்நாட்டு ஊழியர்களின் குடியேற்றத்தை கட்டுப்படுத்தவும் டிரம்ப் முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளார். அதன்படி, அமெரிக்காவில் வேலை செய்ய பயன்படும் H1B விசாவிற்கான கட்டணத்தை, ஆண்டு ஒன்றுக்கு 1 லட்சம் டாலர்களாக நிர்ணயித்து கையெழுத்திட்டுள்ளார். கடந்த ஆண்டில், H1B விசாவை பயன்படுத்தி இந்தியர்களே அதிகளவு (71%) அமெரிக்கா சென்றது குறிப்பிடத்தக்கது.