வயநாடு, செப்.19– ஆபத்தான பள்ளத்தாக்குகளில் பிரியங்கா காந்தி இறங்கி நடந்து சென்று பழங்குடியின மக்களை சந்தித்தார். அப்போது அவர் பழங்குடி மக்க ளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவதாக உறுதியளித்தார்.
வயநாட்டில் சுற்றுப்பயணம்
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், வயநாடு மக்களவை உறுப்பினருமான பிரியங்கா காந்தி தனது சொந்த தொகுதியில் சுற்றுப்பயணம் மேற் கொண்டு வருகிறார். வனவிலங்குகள் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடினார். தொடர்ந்து வயநாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இந்தநிலையில் வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மலப்புரம் மாவட்டம் நிலம்பூருக்கு பிரியங்கா காந்தி நேற்று (18.9.2025) வந்தார். பின்னர் நிலம்பூர் தேக்கு மர பண்ணையை பிரியங்கா காந்தி பார்வையிட்டார்.
அப்போது தேக்கு மரங் களின் தரம் குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கலந்துரையாடி னார். மேலும் தோட்ட தொழிலாளர் களை சந்தித்து, அவர்களிடம் பிரச் சினைகளை கேட்டு அறிந்தார்.
பள்ளத்தாக்குகளில்….
இதைத்தொடர்ந்து நெடுங்கயமத் தில் உள்ள அடர்ந்த காடுகளில் வசிக்கும் பழங்குடியின மக்களை நேரில் சென்று சந்திப்பதற்காக சரிவான பாறைகள், ஆபத்தான பள்ளத்தாக்குகளில் மயிர் கூச்செரி யும் வகையில் பிரியங்கா காந்தி இறங்கி சென்றார். பின்னர் பழங் குடியின மக்களை சந்தித்து, அவர் களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது அவர்கள் வீடு உள்பட அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதை கண்டார். பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பான இடத்தில் வீடுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அப்பகுதிக்கு செல்ல சாலை வசதி இல்லை. ஆபத்தான பள்ளத் தாக்குகளில் பிரியங்கா காந்தி இறங்கி நடந்து செல்வதற்கு பழங்குடியின மக்கள் உதவினர்.
இதையடுத்து கொட்டியம் வயல் வனப்பகுதியில் உள்ள படிஞ்சாரத்தரா-பூழிதோடு இடையே அமைக்கப்படும் புதிய சாலை பணியை பிரியங்கா காந்தி பார்வையிட் டார். அவர் வருகிற 22-ஆம் தேதி வரை வயநாடு தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக காங்கிரசார் தெரிவித்தனர்.