உலக மயமாகிறார் பெரியார்!
அமெரிக்கா-ராலே-கேரியில் ரன் ஃபார் பெரியார்!
அமெரிக்கா-ராலே-கேரியில் ரன் ஃபார் பெரியார்!
வட கரோலினா, செப்.16– அமெரிக்கா, வட கரோலினா மாநிலம் ராலே- கேரி யில் தந்தை பெரியார் 147 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ரன் ஃபார் பெரியார் (பெரியாருக்கான ஓட்டம்) நிகழ்ச்சி பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் கிரீன் ஹோப் பள்ளி திடலில் நடைபெற்றது 50 பேர் நிகழ்வில் பங்கேற்க பதிவு செய்திருந்தனர். அனைவரும் நிகழ்வில் பங்கேற்று 5 கிலோ மீட்டர் ஓட்டம் மற்றும் நடையில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் டாக்டர் சோமா.இளங்கோவன் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
பங்கேற்றோர்
தமிழ்ச் சங்கத் தலைவர் பாரதி, பெரியார் பன்னாட்டு அமைப்பைச் சேர்ந்த மோகன், வைரக்கண்ணு, டாக்டர் சரோஜா இளங்கோவன், அமரன், அம்ஜத், அரவிந்தன், அறிவுப் பொன்னி, எழில் வடிவன், இனியா, இலக்கியா, கலைச்செல்வி, தேவகி, எலியாஸ், ஜெரால்ட், குருபரன், இளஞ்செழியன், இனிகோ, கப்பியன், கிருஷ்ணன், லியோ, மாலதி, மகாலிங்கம், மோகன்ராஜ், முருகேசன், ரமேஷ், சாந்தி, சரண்யா, சாருலதா, செல்வன், செந்தில்குமார், சேது, சுஜாதா, வேதாந்த், வாசு ஆகியோர் பங்கேற்றனர்.
முதல் மூன்று இடங்களை பெற்றவர்கள்
ஆண்கள்: முதலிடம் இனிகோ, இரண்டாம் இடம் கப்பியன், மூன்றாம் இடம் செல்வன்.
மகளிர்: முதலிடம் தேவகி, சாருலதா, இரண்டாம் இடம்: சுஜாதா, மூன்றாம் இடம்: மாலதி.
சிறப்பு அழைப்பாளர்கள்
நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பதக்கங்களை அணிவித்து பாராட்டு வழங்கியவர் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் மற்றும் டாக்டர் சரோஜா இளங்கோவன். ஓட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் காலை சிற்றுண்டி உடன் பெரியார் விழா நிறைவு பெற்றது. மருத்துவர் சோம.இளங்கோவன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். தந்தை பெரியார் உலகமயம் ஆனதன் அடையாளமாக இந்த நிகழ்ச்சி அமெரிக்காவில் தொடக்க நிகழ்வாக அமைந்தது.