தருமபுரி, செப். 16– தருமபுரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக 14-09-2025 அன்று காலை 9:30 மணிக்கு, தருமபுரி அதியமான் அரண்மனை கூட்ட அரங்கில் பெரியார் உலகம்-நிதியளிப்பு நிகழ்வு நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் கு.சரவணன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் பீம.தமிழ் பிரபாகரன் விழாவில் கலந்துக்கொண்ட அனைவரையும் வரவேற்றார். மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன் தருமபுரி மாவட்டத்திற்கு வருகைத் தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வரவேற்புகளை வழங்கியும், விழா நிகழ்வில் கழகத் தோழர்கள், மற்ற கட்சி தோழர்களையும் பங்கேற்று சிறப்பிக்கும் வகையில் ஒருங்கிணைத்து ஏற்பாடுகளை செய்தார்.
பெரியார் உலகத்திற்கு நிதி வழங்கியோர்
கே.ஆர்.சி.ஆசைத்தம்பி கழக காப்பாளர், மரு.இரா.செந்தில் (மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர், பாமக), .அ.தீர்த்தகிரி கழக காப்பாளர், 4.பழனி.புள்ளையண்ணன் மேட்டூர் கழக மாவட்ட காப்பாளர், மரு.பி.கே.ஆர்.புகழேந்தி-மீனா குடும்பத்தினர், டி.பி.பழனியப்பன்-பி.கே.ஆர்.மலர்விழி குடும்பத்தினர், க.கதிர் பொதுக்குழு உறுப்பினர், கதிர்.செந்தில்குமார் பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் குடும்பத்தினர், மரு.ஊமை.ஜெ.கனிமொழி, வழக்குரைஞர் ஆர்.சிவம் மேனாள் தலைவர் வழக்குரைஞர் சங்கம், பி.கே.முருகன் அரசு குற்றவியல் வழக்குரைஞர், ஆவின்.சரவணன் பகுத்தறிவாளர் கழகம், வழக்குரைஞர் பீம.தமிழ்பிரபாகரன் மாவட்டச் செயலாளர், மு.பரமசிவம் மேனாள் மாவட்டத் தலைவர், மரு ந.தியாகராஜன், கு.சரவணன் மாவட்டத் தலைவர், ஊமை.மு.சக்கரை-சின்னபாப்பா ஒன்றிய துணைச் செயலாளர் திமுக, ஆசிரியர் சங்கர்செட்டியப்பன் தருமபுரி அம்பேத்கர் அறக்கட்டளை, த.மணிவேல் பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணைச் செயலாளர், இரா.பழனி நகர செயலாளர், வரகூர் தம்பிதுரை, வரகூர் த.நேசமணி, வழக்கறிஞர் மா.எழிலரசி, காமலாபுரம் டைலர் முத்து, ம.சுதா விடுதலை வாசகர் வட்ட மாவட்ட செயலாளர்,
ஊமை.ஜெயராமன் மாநில ஒருங்கிணைப்பாளர், தகடூர்.தமிழ்ச்செல்வி மாநில மகளிரணி செயலாளர் ஆகியோரின் நாற்பத்தி அய்ந்தாவது ஆண்டு வாழ்க்கை இணையேற்பு நாளினை சிறப்பிக்கும் வகையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பாராட்டி பயனாடை போற்றி வாழ்த்தினார்.
கழகத்தின் மூத்த முன்னோடிகளின் இயக்கப்பணியை போற்றும் வகையில் க.கதிர் பொதுக்குழு உறுப்பினர், அ.தீர்த்தகிரி கழக காப்பாளர், மரு. எம்.என்.தியாகராஜன், மேனாள் மாவட்ட தலைவர் சிவாஜி ஆகியோருக்கு பயனாடை அணிவித்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
தகடூர்.தமிழ்ச்செல்வி மாநில மகளிரணி செயலாளர், த.கு.பாண்டியன் தருமபுரி மத்திய மாவட்டச் செயலாளர் விசிக, சி.காமராஜ் மாவட்ட துணைச் செயலாளர், மா.செல்லதுரை மாநில இளைஞரணி துணைச் செயலாளர், சேலம் மாவட்டத் தலைவர் வீரமணி ராஜு, ஆத்தூர் செல்வம், அ.சங்கீதா பொதுக்குழு உறுப்பினர், இர.கிருட்டினமூர்த்தி பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர், தி.அன்பரசு பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர், நா.பார்த்திபன், த.மு.யாழ் திலீபன், கே.ஆர்.குமார், சிந்தாமணியூர் சுப்பிரமணி, மா.சென்றான், எல்லை.தன்ராஜ், ந.பெருமாள், நளினிகதிர், சோபியாசெந்தில்குமார், பெ.கோகிலா, கண்.இராமச்சந்திரன், மு.சிசுபாலன், பெ.மாணிக்கம், மா.சங்கரன், அழகேசன், ஊமை.காந்தி, ச.கி.வீரமணி, செ.சோ.இனியன்பிரபாகரன, ச.கி.செம்மொழியரசு, த.ஈழவேந்தன், ஓட்டுநர் அம்ஜத்பாஷா, ஊமை.சிகாமணி, சிவாடி சங்கர், மாரவாடி ஊமை மு.கணேசன், கோ.பேரறிவு மற்றும் பெருந்திரளாக தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.