தமிழ் நாட்டின் தலைமகன் அண்ணா !

4 Min Read

முனைவர் க. அன்பழகன்
(மாநில கிராமப் பிரச்சாரக் குழு
அமைப்பாளர், திராவிடர் கழகம்

“நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. நாலரைக் கோடி தமிழர்களின் எதிர்காலம் இருட்டாக இருக்கிறது” என்று தந்தை பெரியார் தனது தலைமைச் சீடர் – தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த அண்ணா மறைந்தபோது கண்ணீர் மல்க கூறினார்.

“நான் தந்தை பெரியாரை தத்துவத் தலைவராக ஏற்றுக்கொண்டு கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் தந்தை பெரியார் ஒருவர் தான்” என்று இறுதி மூச்சுவரை இயங்கிய அண்ணா, பெரியாரின் கொள்கைகளை சட்டமாக்கிட அரசியல் பாதையில் பயணித்தல் அவசியம் என்றுணர்ந்து தி.மு.க. எனும் கட்சியைத் தொடங்கினார். தேர்தல் களம் கண்டார், வென்றார்.

தேர்தலில் வெற்றிவாகை சூடிய அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்கும் முன் தன் கொள்கை ஆசான் அறிவாசான் தந்தை பெரியாரை சந்தித்து வாழ்த்துப் பெற திருச்சிக்கு தனது தம்பிகளுடன் புறப்பட்டார். அய்யாவின் வாழ்த்துகளை பெற்றுக் கொண்டு எனது ஆட்சியே தங்களுக்கு எங்களின் காணிக்கை என்று நன்றி ததும்ப உள்ளம் நெகிழ உரைத்தார். அய்யா உச்சி முகர்ந்து மகிழ்ச்சி பொங்க வழியனுப்பினார்.

தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப் பட்ட திராவிட மக்கள் கல்வி வேலைவாய்ப்பு பெற ஆட்சி அதிகாரத்தில் அமர உலகு போற்றும் உன்னத உயர்நிலையை அடைய பேரறிஞர் அண்ணா கொண்ட கொள்கையும் கண்ட இயக்கம் ஆற்றிய தொண்டும் அசைக்க முடியாத அடித்தளம் என்பது கல்லில் செதுக்கிய உண்மை ஆகும்.

தமிழாய்ந்த தலைமகன் சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக அறிஞர் அண்ணா 1967 மார்ச் 6 ஆம் நாள் ‘உளமார’ என்று உறுதி கூறி பொறுப்பேற்றார்.

இந்திய ஒன்றியம் – அதிலமைந்த ஆட்சிகள் அது நாள் வரை சிந்திக்காத பல புதுமையான சமுதாய மாற்றத்திற்கான திட்டங்களை நிறைவேற்றினார்.

வறுமை ஒழிப்பு அனைவர்க்கும் கல்வி தனியார் துறை ஒழிப்பு அறிவுப் பொது உடைமை ஆக்கம் முனைப்பு மக்கள் நல்வாழ்வு பெருக்கத்திற்கு ஆவன செய்தல் என சமுதாய மறுமலர்ச்சிக்கான திட்டங்கள் தீட்டப்பட்டு சட்டமாக்கப்பட்டது.

ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி என்று வழங்கிட ஆணையிட்டு ஏழைகளின் வயிற்றில் பால்வார்க்கப் பட்டது. ஜாதிக் கொடுமைக்கு முடிவு காண ஜாதி மறுப்புத் திருமணத்திற்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. பொது உடைமைப் பூத்திட   போக்குவரத்துத் துறையில் பேருந்துகளை அரசுடமைக்கும் திட்டம் ஆய்வு, வரியில்லா நிதிநிலை அறிக்கையை வரலாறு காணும் வாய்ப்பு உருவாக்கப்பட்டது. ஆண்டாண்டு காலமாய், கல்வி உரிமை மறுக்கப்பட்ட பஞ்சம, சூத்திர மக்களின் கல்விக்கண் திறந்திட – உயர்கல்வி கற்றிட புகுமுக வகுப்பு (Pre-University Course) வரை இலவசக் கல்வி வழங்கப்பட்டது. தகுதி திறமை என்ற ஆதிக்க ஜாதியின் சதியை முறித்திட திட்டம் தீட்டப்பட்டது. வேளாண்மை சிறக்க உழைப்பாளர் உயர்ந்திட நிலவரி நீக்கப்பட்டது.

அறிஞர் அண்ணாவின் ஆட்சி கொண்டுவந்த மறுமலர்ச்சி திட்டங்களால்  சமுதாய நீடு துயில் கொண்ட தமிழினம் விழிக்கத் தொடங்கியது.வரலாற்றில் திராவிடர் மட்டுமே இடம்பெற்ற அமைச்சரவை அமைந்தது.

அண்ணா ஆட்சியின்
முத்தான மூன்று சட்டம்

சுயமரியாதைத் திருமணம்

அகம் புறம் என்று வாழ்க்கையை அறிவார்ந்து பிரித்து பெருவாழ்வு வாழ்ந்திட்ட திராவிடத்து மக்களின் மணமுறையில் புகுத்தப்பட்ட ஆரியப் பண்பாடான, “கன்னிகா தானம் விவாஹ சுப முகூர்த்தம்” எனும் முறையை விலக்கி, தமிழர்களின் சுயமரியாதையை மீட்டெடுக்க தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட ‘‘சுயமரியாதைத் திருமணம்” சட்டமாக்கப்பட்டது.

17.07.1967 அன்று சுயமரியாதை திருமண  சட்டமுன் வரைவை அண்ணா சட்டமன்றத்தில் முன்மொழிந் தார். ஏற்கனவே செய்திட்ட திருமணமும் செல்லத் தக்க வகையில் சட்டம் நிறைவேறியது. இச்சட்டம் ஒரு புரட்சிகரமான சட்டம் என்றால் மிகையில்லை.

தமிழ்நாடென பெயர் மாற்றம்

தமிழாய்ந்த தமிழ்மகன் ஆட்சியில் சென்னை மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று வெளியிடப்பட்டது. தமிழ்கூறும் நல்லுலகம் மகிழ்ந்தது. தமிழினம்
தலை நிமிர்ந்தது.

தமிழ்நாடு என்று பெயர் மாற்றும் தீர்மானம் 18.07.1967 அன்று சட்டமன்றத்தில் முன்மொழியப் பட்டு அண்ணாவால் நிறைவேறியது ஒரு மனதாக

இந்நிகழ்விற்கு சென்றிட மருத்துவர்கள் உடல்நிலை காரணமாக மறுத்தபோதும், என் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டும் நிகழ்விற்கு செல்லாமல் என் உயிர் இருந்தென்ன பயன் என்று கூறி, அண்ணா பெயர் சூட்டினார். தமிழ்நாடு என்று மூன்று முறை அண்ணா முழங்க வாழ்க, என அனைவரும் குரலொலிக்க உலகின் மூலை முடுக்கெல்லாம் தமிழ்நாடு எனும் பெயர் எதிரொலித்தது.

இருமொழிக் கொள்கை

தமிழ்நாட்டில் இருமொழி மட்டும் (தமிழ், ஆங்கிலம்) கல்வி மொழி ஆட்சிமொழி என்று உறுதி செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டு, இந்தித் திணிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்தி மூன்றாவது மொழி என்ற சூழ்ச்சிக்கு தமிழர்களை தமிழ்நாட்டை காவு கொடுக்காமல் அண்ணா காப்பாற்றிதால்தான் இன்று தமிழ்நாடு உயர்கல்வியில் முதலிடம் மருத்தும், தொழில் துறை, எந்திர உற்பத்தி, பொறியியல், பல்துறை சார்ந்த அனைத்திலும் முதலிடம்.

அடுக்குத் தமிழில் பேச்சு அறிவார்ந்த ஆட்சி – அனல் பறக்கும் அகிலம் வியக்கும் அறிவாற்றல் என அனைத்து திறனும் பெற்றிட்ட அண்ணா தந்தை பெரியாரைப் பார்த்து பணிவுடன் செய்திட்ட இரு பிரகடனங்கள் சிறப்புக்குரியது.

ஒன்று, அய்யா விரும்பினால் முதலமைச்சராக என் பணி தொடரும். இல்லையென்றால் முதல மைச்சர் பதவியை தூக்கி எறிந்துவிட்டு தங்களுக்கு பைதூக்கிக் கொண்டு காடுமேடெல்லாம் சுற்றிவர இந்த அண்ணாதுரை தயார்.

மற்றொன்று,

நான் கொண்டுவந்த முத்தான மூன்று சட்டங் களான சுயமரியாதைத் திருமணம், தமிழ்நாடு பெயர் சூட்டல், இருமொழிக் கொள்கை ஆகியவைகள் தமிழ்நாட்டில் இருக்கும்வரை, அதில் கைவைக்க அஞ்சும்வரை தமிழ்நாட்டிற்கு முதலமைச்சர் அண்ணாதுரை தான்.

தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட திராவிட மக்கள் கல்வி வேலைவாய்ப்பு பெற ஆட்சி அதிகாரத்தில் அமர உலகு போற்றும் உன்னத உயர்நிலையை அடைய பேரறிஞர் அண்ணா கொண்ட கொள்கையும் கண்ட இயக்கம் ஆற்றிய தொண்டும் அசைக்க முடியாத அடித்தளம் என்பது கல்லில் செதுக்கிய உண்மை ஆகும்.

பெரியார் பெரும்படையின் தளபதி பேரறிஞர் அண்ணா பிறந்ததிட்ட நாள் தான் செப்டம்பர் 15.

பேரறிஞர் அண்ணா வாழ்க!

அவர் போற்றிய திராவிடம் வெல்க!!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *