அறிஞர் அண்ணாவின் 117 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.9.2025) திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே அமைந்துள்ள அறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது உருவப் படத்திற்கு மலர்தூவியும், மரியாதை செலுத்தினார். உடன் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், வடசென்னை மாவட்டத் தலைவர் தளபதி பாண்டியன், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் வே.பாண்டு, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன் மற்றும் தோழர்கள் உள்ளனர்.