இதுதான் ஒன்றிய பா.ஜ.க. அரசு! ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றத்தால் பொருள்களின் விலை அதிகரிப்பு!

3 Min Read

புதுடில்லி, செப்.13 ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஜி.எஸ்.டி. வரி விகித மாற்ற அறிவிப்பால் பொருள்களின் விலை அதிகரித்துள்ளது.

பிரதமர் மோடி, தனது சுதந்திர நாள் உரையில் நாட்டு மக்களுக்கு இந்தாண்டு ஜி.எஸ்.டி.யில் வரி சீர்த்திருத்தம் செய்யப்படும் என்றார். அதன்படி கடந்த 3 ஆம் தேதி டில்லியில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் இதுவரை இருந்த 5, 12, 18, 28 என்ற வரி விகிதங்கள் 5 மற்றும் 18 சதவீதம் என்ற இரட்டை அடுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. அத னால் 12 சதவீதத்தில் இருந்த பொருள்கள் எல்லாம் 5 சதவீதத்திற்கும், 28 சதவீதத்தில் இருந்தவை 18 சதவீதத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த புதிய வரி மாற்றங்கள் வருகிற 22 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

இந்த மாற்றத்தால் மக்கள் பயன்படுத்தும் பெரும்பாலான பொருள்கள் விலை குறைந்து இருக்கிறது. உதாரணமாக வீட்டு உபயோகப் பொருள்களான பிரிட்ஜ், ஏசி, வாசிங் மெசின் மற்றும் கார்கள் 28 சதவீதத்தில் இருந்து
18-க்குள் வருகிறது. மேலும் பென்சில், ரப்பர் போன்ற ஸ்டேசனரி பொருள்கள், மருத்துவ காப்பீடுகள் ஆகியவற்றுக்கு முழுமையாக வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.

12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக வரி உயர்ந்துள்ளது

அதேவேளையில் சில பொருள்களுக்கும், சேவைகளுக்கும் வரி அதிகரித்துள்ளது. அதன்படி நெய்த மற்றும் நெசவு செய்யப்பட்ட ஆடைகள் மற்றும் பஞ்சை இடையில் வைத்து தைக்கப்படும் பொருள்கள் அதாவது குயில்ட் மெத்தைகள் போன்ற பொருட்கள் ரூ.2 ஆயிரத்து
500-க்கு மேல் இருந்தால் தற்போதைய வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கம்பளிகள் 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக வரி உயர்ந்துள்ளது. அதனால் இந்த பொருள்களின் தற்போதைய விலை யில் இருந்து அதிகரித்து விடும்.

அதேபோல வேலைகளை பிறருக்கு அளிக்கும் ஜாப் வொர்க் சேவைகள், எண்ணெய் மற்றும் எரிவாயு சுரங்கம் தொடர்பான தொழில்நுட்ப சேவைகள், சுரங்க ஆதரவு சேவைகள் என அனைத்து 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் அரசு சார்ந்த பணிகளான கடல்சார் பணிகள், மண் அகழ்வுப் பணிகள், துணை ஒப்பந்தங்கள் ஆகியவை 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரித்துள்ளது.

5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது

அதேபோல் நிலக்கரி, லிக்னைட் ஆகி யவை 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பான்மசாலா, அனைத்து இனிப்புப் பானங்கள், ஆல்கஹால் இல்லாத குளிர்பானங்கள், கார்பனேட்டு பழச்சாறுகள், பழச்சாறுகள், புகையிலை, சிகரெட், பிற புகையிலை தயாரிப்புகள், நிக்கோடின் பொருள்கள்ஆகியவை அனைத்தும் 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்ந்துள்ளது.

28 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது

கேசினோ, சூதாட்டம், ரேஸ் கிளப்பு கள், இணைய தள விளையாட்டுகள்,
அய்.பி.எல். போட்டிக்கான வரி ஆகியவை 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக இருக்கிறது.

விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிறது!

விமானப் பயணங்களில் எகானமி அல்லாத முதல் வகுப்பு, பிசினஸ் கிளாஸ் பயணங்களுக்கு இதுவரை 12 சதவீத ஜி.எஸ்.டி. இருந்தது. ஆனால் தற்போது அது 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக விமானக் கட்டணங்கள் அதிகரிக்க உள்ளன. அதேபோல், எரிபொருள் செலவு சேர்த்து வசூலிக்கப்படும் மோட்டார் வாகனப் பயணக் கட்டணங்களும் 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளன. இதனால், வாடகைக் கார்களிலும், தனியார் போக்குவரத்து சேவைகளிலும் பயணச் செலவு கூடும். சரக்கு போக்குவரத்திலும் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிறது.

இந்திய ரயில்வே தவிர்த்த பிறரால் இயக்கப்படும் ரயில் கன்டெய்னர் போக்கு வரத்து, இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோ லியப் பொருள்கள் பைப் லைன் மூலம் கொண்டு செல்லப்படும் சேவைகள், மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகிய அனைத்தும் 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளன. மேலும், வாடகை வாகன சேவைகளில் – மோட்டார் வாகனங்களும், லாரி போன்ற சரக்கு வாக னங்களும் 12 சதவீதத்திலிருந்து 18 சதவீத மாக உயர்த்தப்பட்டுள்ளது.

பொருள்களின் விலைகளும் கூடும் வாய்ப்புள்ளது!

இந்த மாற்றங்களின் தாக்கமாக, சரக்குப் போக்குவரத்து கட்டணங்கள் அனைத்தும் அதிகரிக்கின்றன. இதன் விளைவாக மக்கள் அன்றாட வாழ்க்கைச் செலவுகள் மட்டுமல்லாமல், சந்தையில் பொருள்களின் விலைகளும் கூடும் வாய்ப்புள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *