புதுடில்லி, செப்.12- குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஓட்டுக்கு ரூ.20 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக எதிர்க்கட்சிகள் சந்தேகம் கொண் டுள்ளன.
கணிக்கப்பட்ட வாக்குகள்
17-ஆவது குடியரசு துணைத் தலைவர் தேர்தல் கடந்த 9-ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலுக்கான மொத்த வாக்குகள் 781 ஆகும். இதில் 767 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் 452 வாக்குகள் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கும், 300 வாக்குகள் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளரான சுதர்சன் ரெட்டிக்கும் கிடைத்தன. மீதம் உள்ள 15 ஓட்டுகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன.
தேர்தலுக்கு முன்பு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 427 வாக்குகள் உறுதி செய்யப்பட்ட வாக் குகளாகவும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 11 பேர் வாக்களித்தால் 438 ஆக அது அதிகரிக்கும் எனவும் கருதப்பட்டது. இதைப் போல எதிர்க்கட்சி வேட்பாளருக்கு 324 வாக்குகள் கணிக்கப்பட்டது.
எதிர்பார்த்ததைவிட அதிகம்
ஆனால் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எதிர்பார்த்ததைவிட அதிகமாக வாக்குகள் விழுந்துள்ளன. இதனால் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பி னர்கள் அவருக்கு வாக்கு அளித் திருப்பதாக கூறப்படுகி றது. அதைப் போல செல்லாத வாக்குகளாலும் அவருக்கு மறைமுகமாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உதவி இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பி னர்கள் அபிஷேக், காங்கிரஸ் நாடா ளுமன்ற உறுப்பினர்கள் மணீஷ் திவாரி உள்ளிட்ட சிலர் இதில் பிரச்சினையை கிளப்பி உள்ளனர்.
உத்தவ் பால்தாக்கரேயின் சிவசேனா கட்சியில் 3 பேரும், ஆம் ஆத்மி கட்சியில் 4 பேரும், தேசியவாத காங்கிரசின் சரத்பவார் அணியில் 2 பேரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவில் ஒன்று அல்லது 2 வாக்குகளும், காங்கிரசில் ஒன்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சென்றிருக்கலாம் என சொல்லப்படுகிறது.
சி.பி.ராதாகிருஷ்ணன் மராட் டியம் மட்டுமின்றி, ஜார்கண்ட் மாநிலத்திலும் முன்பு ஆளுநராக இருந்ததால் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவாக வாக்களித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
ரூ.20 கோடி வரை பேரம்
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், தேர்தல் முடிந்த உடனே தங்கள் அணிக்கு 315 வாக்குகள் சரியாக விழுந் திருக்கும் என்ற ரீதியில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். ஆனால் 300 தான் கிடைத்து இருந்தது. 15 வாக்குகள் செல்லாதவை ஆகிவிட்டன. இந்த 15 வாக்குகளும் இந்தியா கூட்டணியின் வாக்குகளாகத்தான் இருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படுகிறது.
இதற்கிடையே, எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே வாக்குக்கு ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி வரை பேரம் பேசப்பட்ட தகவல் தங்களுக்கு கிடைத்ததாகவும் சில தலைவர்கள் கூறியுள்ளனர்.
வாக்குத் திருட்டு
வேறு சில தலைவர்கள் இதி லும் வாக்குத்திருட்டு நடைபெற்றிருப் பதாக குற்றம் சாட்டு கிறார்கள்.
இதுபற்றி காங்கிரஸ் நாடாளு மன்ற உறுப்பினர்கள் மாணிக் தாக்கூரும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார். “குடியரசுத் துணை தலைவர் தேர்தலில் வாக்குத்திருட்டு இல்லை என்றால், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்ததற்காக இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஷிண்டே ஏன் நன்றி சொல்ல வேண்டும்? எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் “மனசாட்சி வாக் குகளை” ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஏன் கொண்டாடுகிறார்? இது உண்மையிலேயே மன சாட்சியா? அல்லது விசாரணை அமைப்புகளின் அழுத்தமா அல்லது குதிரை பேரம் மனசாட்சியாக நியாயப்படுத்தப்படுகிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “பா.ஜனதா தலை வர்களே எதிர்க்கட்சி வாக் குகள் கிடைத்ததாக ஒப்புக்கொள்ளும் போது அது நாடாளுமன்றத்துக்குள் வாக்குத் திருட்டுக்கான சான்றாக இல்லையா? திருடுவதை பெருமை பேசினால் ஜனநாயகம் நிலைத்து நிற்குமா?” என்றும் கேட்டுள் ளார்.
யூகங்களே
பா.ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்த எதிர்க் கட்சி உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்ததையும், ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜி, மனசாட்சிப்படி அவர்கள் வாக்களித்ததாக கூறியதையும் சுட்டிக்காட்டிய அபிஷேக், குதிரை பேரத்துக்கு பணிந்த மனசாட்சியா? என குத்திக் காட்டியிருக்கிறார். இருந்தாலும் அனைத்தும் யூகங்களாகவே இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.
இப்படி எதிர்க்கட்சிகள் பலவாறாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி இந்த விஷயத்தில் விரிவான விசாரணை நடத்த கோரியிருக்கிறார்.