சேலம்,மே30 – சேலம் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட காப்பாளர் கி. ஜவகர் முன்னிலையேற்க தலைமைக் கழக அமைப்பாளர் எடப்பாடி கா.நா. பாலு தலைமையில் 28.3.2023 ஞாயிறு காலை 11.30 மணியளவில் சேலம் குயில் பண்ணையில் நடை பெற்றது.
மாவட்ட தலைவர் அ.ச.இள வழகன், துணை தலைவர் பழ. பரமசிவம், செயலாளர் பா. வைரம், அமைப்பாளர் சி. பூபதி, மாநகர தலைவர் அரங்க. இளவரசன், செயலாளர் வெ. இராவண பூபதி, துணை செயலாளர் கு. ராஜீ, பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர்கள் வீரமணி ராஜீ, அன்பு மதி, மின்னக்கல் செல்வக்குமார், கே.குமாரசாமி மற்றும் வழக் குரைஞர் செல்வகுமார் ஆகியோர் பங்கேற்று கருத்துரை வழங்கினர்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் எண் 1: இரங்கல் தீர்மானம்:
12.2.2023 அன்று மறைந்த சேலம் மாவட்ட கழகத்தின் மேனாள் கூட்டுச் செயலாளர் வழக்குரைஞர் மா. கவுதமபூபாலன்,
01.5.2023 அன்று மறைந்த பெரியார் பற்றாளர் டி. ஆரோக்கிய சாமி மற்றும் பெரியார் கொள்கை யாளரும் அரசு ஓமியோபதி மருத் துவருமான சசிக்குமார் அவர் களின் தந்தை அவில்தார் மேஜர் முத்துசாமி ஆகியோரின் மறை விற்கு ஆழ்ந்த இரங்கலையும், வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்வது.
தீர்மானம் எண் 2:
சேலம், தஞ்சாவூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் “மினி டைட்டல் பூங்காக்கள்” அமைத்திட 19.5.2023 அன்று அடிக்கல் நாட்டி துவக்கிவைத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு சேலம் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்வது.
தீர்மானம் எண் 3:
13.5.23 அன்று ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்குழு தீர்மா னங்களை கழகத்தின் அணைத்து அணியினரையும் ஒருங்கிணைத்து சிறப்பான வகையில் நிறைவேற் றுவது.
தீர்மானம் எண் 4:
வைக்கம் போராட்டம், சேரன் மாதேவி குருகுலப் போராட்டம், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, சிந்துச் சம வெளி அகழாய்வுகளை மேற் கொண்ட சர்ஜான் மார்சலின் நூற்றாண்டு விழாக்களை சிறப் பான வகையில் கொண்டாடும் விதமாக சேலம் மாநகரில் 100 இடங்களில் தெருமுனை கூட்டங் களை நடத்துவது என்பன போன்ற தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
புதிய பொறுப்பாளர்கள் நியமனம்:
மாவட்ட அமைப்பாளர் :
வெ. இராவண பூபதி
மாநகர செயலாளர் : சி. பூபதி
மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர் : செல்வகுமார்
ஆகியோர் தலைமை கழக அமைப்பாளரால் நியமிக்கப்பட்டனர்.