7.9.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ஓபிஎஸ், சசிகலாவை சேர்க்க கோரி 10 நாள் கெடு விதித்த செங்கோட்டையன் கட்சி பதவிகள் பறிப்பு: எடப்பாடி பழனிசாமி அதிரடி
* ஹிந்துஜா நிறுவனம் ரூ.7500 கோடி தமிழ்நாட்டில் முதலீடு செய்திட ஒப்பந்தம்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இங்கிலாந்து, ஜெர்மனி பயணத்தில் ரூ.15,516 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்: 17,613 பேருக்கு வேலைவாய்ப்பு
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பீகாரின் 2025 சட்டமன்றத் தேர்தலில், 243 தொகுதிகள் வெறும் கணிதக் குறியீடுகள் அல்ல. இது ஒரு உயர்ந்த ஜனநாயக டெல்டா ஆகும், னிட் நிதிஷ் குமாரின் ஜே.டி.யு, தேஜஸ்வியின் ஆர்.ஜே.டி., ராகுல் தலைமையில் காங்கிரஸ் என மூன்று தலைவர்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும் தேர்தல் என்கிறார் கட்டுரையாளர் பிரபு சாவ்லா.
தி ஹிந்து:
* கர்நாடகாவில் வாக்காளர் மோசடி தொடர்பான விசாரணை: தேர்தல் ஆணையம் தகவல் தர மறுப்பு:கர்நாடகாவின் ஆலந்த் சட்டமன்றத் தொகுதியில் போலி விண்ணப்பங்கள் மூலம் வாக்காளர்களின் வாக்குரிமையை பறிக்க முயன்றதாகக் கூறப்படும் விசாரணை, தேர்தல் ஆணையம் மாநிலம் கோரிய தரவை பகிர்ந்து கொள்ளாததால் தேக்கமடைந்துள்ளது.
* தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கான (‘MGNREGS) மத்திய ஒதுக்கீடு குறைந்து வருவது கிராமப்புற பெண்களை பாதிக்கிறது’. நிதி பற்றாக்குறை காரணமாக இந்தத் திட்டத்தின் கீழ் பணிகள் இனி கிடைக்காததால், 2006-க்கு முந்தைய நிலைமைக்குத் திரும்பியுள்ளோம்,” என்று உத்தரபிரதேசத்தின் சீதாபூரைச் சேர்ந்த NREGA சங்கர்ஷ் மோர்ச்சா ஆர்வலர் ராம் பேட்டி,
டைம்ஸ் ஆப் இந்தியா:
* வரவிருக்கும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர் வேட்பாளர் சுதர்ஷன் ரெட்டிக்கு அசாதுதீன் ஓவைசி AIMIM தனது ஆதரவை வழங்கியுள்ளது.
– குடந்தை கருணா