‘மூடநம்பிக்கை’ அறியாமை பெற்றெடுத்த குழந்தை (5)

8 Min Read

உலகை உலுக்கும் மூடநம்பிக்கைகள்

நரபலி

துருதுருவென்று அழகாக சிரித்துக் கொண்டிருந்த தன்னுடைய பத்து மாத மகளுக்கு தாயே விஷம் கொடுத்துக் கொன்றாள் காரணம் அந்த குழந்தை சித்திரை மாதத்தில் பிறந்ததனால் அதற்கு எதிர்காலத்தில் நல்ல வாழ்க்கை அமையாது என்று மந்திரவாதி ஒருவர் கணித்து சொன்னது தான்.

பதை பதைக்க வைக்கும் இந்த நிகழ்வு கலாச்சாரங்களிலும் இலக்கியத்திலும் செழித்து விளங்கும் நமது தமிழ்நாட்டிலேயே நிகழ்ந்துள்ளது என்பது மூடநம்பிக்கை எந்த அளவுக்கு நம்முடைய சமுதாயத்தின் வேர்களை அறிந்திருக்கிறது என்பதற்கு ஒரு சான்று.

இது மட்டுமல்ல; தலைவர்கள் பிள்ளையை நரபலியிடுதல் குழந்தையை கீறி இரத்தம் எடுத்தல் என்றெல்லாம் தினசரி ஏடுகளில் வரும் செய்திகள் நம்முடைய விழிப்புணர்வு எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை கேள்விக்குள்ளாக்குகிறது.

கட்டுரை, ஞாயிறு மலர்

மக்களை இயல்பாகச் சிந்திக்க விடாமல் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயலும் மதங்களும் மந்திரவாதிகளும் இந்த மூடநம்பிக்கைகளை பெருமளவுக்கு வளர்த்து விடுகின்றனர். எதேச்சையாய் நடக்கும் செயல்களுக்குக் கூட காரணங்களை இட்டுக்கட்டி பணம் கறக்கும் மனிதர்களால் இந்த மூடபழக்கவழக்கங்கள் அழியாமல் நிலைபெறுகின்றனர்.

சிலை பால் குடிக்கிறது என்றோ கடல் நீர் கடவுள் கருணையால் இனிக்கிறது என்றோ ஏதேனும் ஒரு பரபரப்பு பிரச்சாரத்தை அவிழ்த்து விட்டுக்கொண்டே இருக்கிறது மதம். காரணம், அதற்கு தேவை சிந்திக்காமல் தலையாட்டியபடியே ஆட்டுமந்தைகளை போல கூடும் கூட்டம். எல்லாம் வியாபார மயமாகிவிட்ட சூழல்தான்.

வாயிலிருந்து உருவங்களை எடுப்பதும் கண்களி லிருந்து பூக்களை எடுப்பதும் என மூடநம்பிக்கைகள் பலவாறாக உள்ளன.

நமது நாடு இப்படி மூடநம்பிக்கைகளின் கூடாரமாகி கிடக்கிறதே என்னும் கவலையில் உலகில் என்னென்ன மூடநம்பிக்கைகள் இருக்கின்றன என்று அலசியதில் கிடைத்த செய்திகள் அதிர்ச்சியடைய வைக்கின்றன. “தூணிலும் துரும்பிலும் இருப்பான்” என்பதை “தூணிலும் துரும்பிலும் இருக்கும் மூடநம்பிக்கை” என்று மாற்ற வேண்டிய அளவுக்கு இந்த மூடநம்பிக்கைகள் உலகமெங்கும் பரந்து கிடக்கின்றன.

எட்டு என்பது இந்தியாவில் கெட்ட எண் என்றால் பதிமூன்று மேல்நாட்டினருக்கு அலர்ஜிக்குரிய எண். பதிமூன்று என்னும் எண் இயேசுவை காட்டிக் கொடுத்த யூதாஸைக் குறிப்பதாம். எனவே, பதிமூன்று என்பது கெட்ட எண் என்பதும் மேல் நாட்டினரின் கருத்து. அதுவும் பதிமூன்றாம் தேதி வெள்ளிக்கிழமையாகிவிட்டால் அது படுபயங்கரமான மோசமான நாளாம். காரணம், இயேசு சிலுவையில் அறையப்பட்டது ஒரு வெள்ளிக்கிழமை. ஆதாம் – ஏவாள் ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தப்பட்டது ஒரு வெள்ளிக்கிழமை என்று காரணங்கள் அடுக்கப்படுகின்றன.

ஸ்பெயின் நாட்டில் பதிமூன்றாம் தேதி செவ்வாய்க்கிழமை வந்து விட்டால் அன்று எந்த செயல்களையும் செய்யமாட்டார்கள். இத்தாலியில் பதிமூன்றாம் எண்ணைப்போல பதினேழும் கெட்ட எண்ணாகக் கருதப்படுகிறது. அது மரணத்தை குறிப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்கா உட்பட பல நாடுகளில் பெரும்பாலான கட்டடங்கள் பதிமூன்றாவது மாடி இல்லாமலேயே கட்டப்படுகின்றன. ஏராளமான குடியிருப்புகளில் பதிமூன்றாம் எண் வீடுகளே இருக்காது. விமான நிலையங்களில் கூட பதிமூன்றாவது எண்ணுள்ள வாசல் பல விமான நிலையங்களில் இருப்பதில்லை.

மரத்தில் பேய் வசிக்கிறது என்பது ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் நம்பிக்கையாக இருந்திருக்கிறது. மரங்களைத் தட்டினால் அதனுள் இருக்கும் பேய் வெளியே வராது என்பது மேல்நாட்டு நம்பிக்கையாக இன்றும் நிலவுகிறது. இந்தியாவில் பெரும்பாலான காடுகளிலிருந்து வெட்டி வரும் மரங்களை வீடுகளில் உபயோகப் பொருட்களானதற்கு முன் பேய் விரட்டும் பூஜை நடக்கிறது.

அமெரிக்கர்கள் அருகிலிருக்கும் யாராவது தும்மிவிட்டால் “கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக” என்பார்கள். தும்மும்போது ஆன்மா வெளியேற முயல்வதாகவும் கடவுள் ஆசிர்வதிப்பாராக என்று சொல்லும்போது ஆன்மா மீண்டும் உடலுக்குள் செல்வதாகவும் அவர்கள் நம்பினார்கள். தும்மும் போதெல்லாம் ஆவி (இங்கிலாந்தைப் பொறுத்தவரை) வெளியேறுவதாக ஆறாவது நூற்றாண்டு வரை நம்பப்பட்டது. பின் பிளேக் நோய் தாக்கிய காலத்தில் வலியுடன் தும்முபவர்கள் மரணத்தை நோக்கியிருக்கப்பதாகக் கருதப்பட்டு அவர்களுக்காகக் “கடவுள் உங்களை ஆசிர்வதிக்கப்படுவதாக” என்று வாழ்த்தத் துவங்கினர். இதன் மூலம் ஒருவன் இறக்க நேரிட்டால் அவனுக்கு கடவுளின் ஆசிர்வாதம் கிடைத்து சுவர்க்கத்துக்கு செல்வான் என்று நம்பப்பட்டது. தும்மும்போது வாழ்த்தும் வழக்கம் எகிப்தில் நிபேரியுஸ் சீசரின் காலத்திலேயே வழக்கத்தில் இருந்ததாகவும் சில கதைகள் சொல்கின்றன.

அமெரிக்க நண்பர் ஒருவரிடம் இதுகுறித்து கேட்டபோது, “தும்மும்போது இதயம் ஒரு வினாடி துடிப்பதை நிறுத்தவதாகவும், அது மீண்டும் துடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக” என்று கூறுவதாகவும் சொன்னார். ‘வீட்டுக்குள் குடையை விரித்தால் மரணம் வரும்’ என்பது அமெரிக்கா உட்பட பல மேல்நாடுகளில் இன்னும் நிலவி வரும் மூட நம்பிக்கை தொப்பியைப் படுக்கையில் வைத்திருப்பது நல்லதல்ல. இன்னும் அமெரிக்கப் பூர்வீகத்தினரிடம் வழக்கத்தில் உள்ளது. அப்படி வைத்தால் மரணம் உட்பட ஏதேனும் தீயது நிகழும் என்பது அவர்களுடைய நம்பிக்கை.

கொட்டாவி விடும்போது கையால் வாயை மூடுவது நாகரீகம் கருதி என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் துவக்க காலத்தில் வாயை திறந்தால் சாத்தான் உள்ளே நுழைந்துவிடுவான் என்று பயந்து கொட்டாவி விடும்போது வாயை மூடியிருக்கிறார்கள்.

நம்மூரில் இரவில் வேப்பமர அடியில் படுத்திருப்பவர்கள் மூச்சுத் திணறி இறக்க நேரிட்டால் முனி அடித்துக் கொன்றதாகச் சொல்வதைப் போல ஓரு நம்பிக்கை முன்பு அமெரிக்காவிலும் இருந்திருக்கிறது.

மின்சாரம் கண்டுபிடிப்பதற்கு முன்பெல்லாம் இடி, மின்னல் ஆகியவை வானத்திலிருந்து சாத்தான் எறிபவை என்பவைதான் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாய் இருந்தது. எனவே, மழைக்காலங்களில் அவர்கள் சாத்தானைப் பயமுறுத்துவதாக ஆலயத்திற்கு ஓடி சென்று ஆலய மணியை அடித்துக் கொண்டே இருப்பது வழக்கம். ஆலயம் மற்ற கட்டடங்களை விட அதிக உயரமுடைய கோபுரத்தை கொண்டிருப்பதால் அடிக்கடி ஆலயங்களில் மின்னல் தாக்கி மணி அடிப்பவர்களை மரணம் அடித்துச் செல்வதும் உண்டு. அதையெல்லாம் சாத்தான் அடித்து செத்ததாகவே மக்கள் நம்பினார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *