யூசெங், செப். 5- சாதனைக்கு வயது ஒரு தடை அல்ல, முயற்சி இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார் சீனாவைச் சேர்ந்த 50 வயதுப் பெண் ஒருவர். யாங் (Yang) என்ற இந்த பெண், தனது மகன் சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வில் தோல்வியடைந்ததால், அவரது புத்தகங்களைப் படித்து தானே அந்த தேர்வில் எழுதி தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்
யாங் என்ற சீனப்பெண்மணி 2013-ஆம் ஆண்டில் ஏற்பட்ட தீ விபத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டார் அவரது முகத்தில் பெரிய தழும்புகள் ஏற்பட்ட தோடு, இடது கை செயலிழந்தது. இத னால் மனவேதனையில் இருந்துள்ளார்
இந்த நிலையில் அவரது மகன் சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வில் தோல்வியடைந்தபோது, மகனுக்கு ஊக்கமளிப்பதற்காக, அவனது புத்தகங் களைப் படித்து தேர்வுக்குத் தயாரானார் யாங்கின் இந்த முயற்சிக்கு அவரது கணவரும் மகனும் உறுதுணையாக இருந்துள்ளனர். தனது கடின உழைப்பின் பலனாக, கடினமான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். தற்போது அவர் புகழ்பெற்ற சட்டப் பல்கலைக்கழகத்தில் மாணவியாக சேர உள்ளார். சீன சட்டத் தின்படி நுழைவுத்தேர்வை எழுத வயது வரம்பு கிடையாது. மேலும் தேர்ச்சி பெற்றால் அவர்கள் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு தடையில்லை. ஆகவே யாங் சட்டக்கல்லூரி மாணவியாகி உள்ளார்
யாங்கின் இந்த தைரியமும் விடா முயற்சியும் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பாராட்டப்பட்டு வருகிறது. தனது வாழ்க்கையில் ஏற்பட்ட துயரங் களை ஒரு படிக்கல்லாக மாற்றி, புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கும் யாங்கின் கதை, பலருக்கும் உத்வேகமளிப் பதாக அமைந்துள்ளது.