பனாஜி, செப்.4- மோசடி காரியங்களுக்கு பயன்படுத் தப்பட்ட 2 கோடிக்கு மேற் பட்ட கைப்பேசி எண்களை தொலைத்தொடர்புத்துறை முடக்கியது. ஏமாற்று அழைப்புகள் 97 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
இணைய பாதுகாப்பு
தெற்கு கோவாவில் மத்திய தொலைத் தொடர்புத்துறை ஏற்பாடு செய்த பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு இந்த ஆண்டுக்கான மேற்கு மண்டல மாநாடு நடந்தது. அதில், மத்திய தொலைத்தொடர்புத்துறை செயலாளர் நீரஜ் மிட்டல் காணொ லிக் காட்சி மூலம் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-
ஒவ்வொரு துறையிலும் அடிப் படை சேவைகள் வழங்கும் தொலைத்தொடர்புத்துறையின் பங்கு அதிகரித்துள்ளது. பயனர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே சமயத்தில், நிதி அமைப்புகளில் தொலைத்தொடர்பு வளங்களை தவறாக பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. அதை தடுத்து இணைய பாது காப்பை மேம்படுத்த தொலைத் தொடர்புத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
2 கோடி கைப்பேசி எண்கள் முடக்கம்
சான்றழிக்கப்பட்ட உயர்தர தொலைத் தொடர்பு சாதனத்தை உறுதி செய்ய தொலைத்தொடர்பு பரிசோதனை ஆய்வகங்களை அதிகரித்து வருகிறோம். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன் பாட்டால், 78 லட்சம் மோசடி இணைப்புகளை அடையாளம் கண்டறிந்து துண்டித்துள்ளோம்.
தொலைத்தொடர்புத்துறை, கூட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து, நிதி மோசடி அபா யத்தை சுட்டிக்காட்டும் கருவியை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன் உதவியால். மோசடி காரியங்களுக்கு பயன் படுத்தப்பட்ட கைப்பேசி எண்களை வெற்றிகரமாக கண்டறிந்துள்ளது. அப்படி 2 கோடிக்கு மேற்பட்ட கைப்பேசி எண்கள் முடக்கப்பட்டன. ஏமாற்று அழைப்புகளை அடை யாளம் கண்டு முறியடிக்க ‘சஞ்சார் சாதி’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
அதன் பலனாக 97 சதவீத ஏமாற்று அழைப்புகளை குறைக்க முடிந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.