மூன்று விழுக்காடு விளையாட்டு இட ஒதுக்கீட்டின் கீழ்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை, செப்.4-3 சதவீத விளையாட்டு இடஒதுக் கீட்டின் கீழ் அரசு, பொதுத் துறை நிறுவனங்களில் 8 வீராங் கனைகளுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
சட்டமன்றத்தில் அறிவிப்பு
தேசிய, மாநில அளவில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு 3 சதவீத விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் அரசு அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று சட்டமன்ற கூட்டத்தொடரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அதன்படி இந்த இடஒதுக்கீட் டின் கீழ் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் இது வரையில் 104 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
வீராங்கனைகளுக்கு பணி
இந்த நிலையில் பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்ற 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் வருவாய்த்துறை, பள்ளி கல்வித் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறைகளில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை குறிஞ்சி இல்லத்தில் நேற்றுமுன்தினம் (2.9.2025) வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.