இணைய வழி மோசடிகள் – 24 மணி நேரத்திற்குள் புகார் அளித்தால் பண இழப்பைத் தடுக்கலாம் காவல் துறை இயக்குநர் அறிவுறுத்தல்

2 Min Read

கடலூர், ஜூன் 1 கடலூர் மாவட்டத்தில் குற்ற வழக்கு களில் மீட்கப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் சைலேந்திரபாபு தலைமை தாங்கி குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட பொருட்களைப் பார்வையிட்டு  ஒப்படைத்தார்.

 அதனைத் தொடர்ந்து  செய்தியாளர்களுக்கு நேர் காணல் அளித்த சைலேந்திரபாபு, “கடலூர் மாவட்டத்தில் திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் குற்றவாளி களிடம் இருந்து மீட்கப்பட்ட 130 பவுன் நகைகள் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

தற்போது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. 1,32,000 காவலர்களைக் கொண்ட தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 10 ஆயிரம் பேரை நியமித்தோம். இதுவரை உள்ள அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளது. பெரும்பாலான காவல் நிலையங்களில் வயது குறைந்த காவல்துறை ஆய்வாளர்,  காவல்துறை துணை ஆய்வாளர்  மற்றும்  துணை காவல் கண்காணிப்பாளர்கள் தான் அதிக அளவில் பணிபுரிகின்றனர். தமிழ்நாடு எல்லையான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய எல்லைகளில் உள்ள 26 முக்கிய சோதனைச் சாவடிகளில் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஆயுதமேந்திய காவலர்கள் 24 மணி நேரமும் சோதனை நடத்தி வருகின்றனர். எதிர்காலத்தில் மற்ற துறைகளுடன் இணைந்து 16 இடங்களில் சோதனைச் சாவடி அமைத்து சோதனை நடத்தப்படும். இணையவழி குற்றங்களான சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சைபர் க்ரைம் என்பது எதிர்காலத்திற்கான குற்றங்கள் ஆகும். இது வரை மக்கள் சந்திக்காத குற்றங்கள் அவை. வேலை வாங்கித் தருவதாகவும் தொழில் தொடங்க உதவுவதாக வும் மேல் அதிகாரிகள் பேசுவதாகவும் எனப் பல்வேறு வழிமுறைகளில் சைபர் க்ரைம் குற்றங்கள் நிகழ்த்தப்படு கின்றன.

இதற்கு 24 மணி நேரத்திற்குள் 190 என்ற கட்டுப்பாட்டு எண்ணில் புகார் அளித்தால் உங்கள் பணத்தை பரி மாற்றம் செய்ய விடாமல் தடுக்க முடியும். பண இழப் பையும் தடுக்க முடியும்.  பொதுமக்கள் அலைபேசியில் காவல் உதவி என்ற செயலியை பதிவிறக்கம் செய்து ஆபத்து காலத்தில் பயன்படுத்தலாம்” என்று கூறினார்.  

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *