சென்னை, ஜூன் 1 பணத்தையும் பறித்துக்கொண்டு கொலை அச்சுறுத்தல் விடுத்த பாஜக நிர்வாகி உள்ளிட்ட இருவர் சென்னை கொரட்டூர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதுகுறித்த விவரம் வருமாறு, சென்னை வில்லிவாக்கம் 9ஆவது தெருவை சேர்ந்தவர் நாராயணி. இவர் கடந்த 10-ஆம் தேதி சென்னை கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் கொரட்டூரில் உள்ள தனது பூர்வீக சொத்தான 78 சென்ட் நிலத்தை விற்பதற்காக நண்பர் சதீஷ் மற்றும் தரகர் பிரகாஷ்ராஜ் ஆகியோரை அணுகினேன். சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள நிலத்தை விற்பது தொடர்பாக சில சிக்கல்கள் இருந்ததால், அதை தீர்த்து வைத்து இடத்தை விற்று கொடுப்பதற்காக கமிஷன் அடிப் படையில் பா.ஜ.க நெசவாளர் பிரிவு மாநில செய லாளர் மின்ட் ரமேஷ் என்பவரை அணுகினோம். இந்நிலையில் வேறு ஒருவர் மூலம் ரூ.5 கோடிக்கு நிலம் விற்கப்பட்டதை தெரிந்து கொண்ட ரமேஷ், தனது கூட்டாளியான நாகர்கோவில் மகேஷ் என்பவருடன் வீட்டிற்கு வந்து என்னிடமிருந்த ரூ.45 லட்சத்தை பறித்துச் சென்றார். மேலும் இது குறித்து காவல்துறைக்குப் புகார் தெரிவித்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்தார். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி புகாரில் நாராயணி கூறியிருந்தார். அதேபோல் தரகர் பிரகாஷ் ராஜ் கடந்த 18ஆம் தேதி கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் மின்ட் ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளி யான நாகர்கோவில் மகேஷ் நேரில் வந்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியிருந் தார்.இந்த 2 புகாரின் பேரில், கொரட்டூர் காவல் துறையினர் தனித்தனியாக 2 வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று (31.5.2023) அதிகாலை காவல் ஆய்வாளர் கிருஷ்ண மூர்த்தி தலைமையிலான காவல்துறையினர் மின்ட் ரமேஷ் மற்றும் நாகர்கோவில் மகேசை கைது செய்தனர்.
ரூ.45 லட்சத்தை பறித்து சென்று கொலை மிரட்டல் : பா.ஜ.க. நிர்வாகி உள்பட 2 பேர் கைது
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
