தொட்டபல்லாபூர், செப்.1 விநாயகன் சதுர்த்தி கடந்த 27ஆம் நாள் கொண்டாடப்பட்டது. இதையடுத்து விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிலையில், கருநாடகாவின் தொட்ட பல்லாபூரில் விநாயகன் சிலை ஊர்வலத்தில் பட்டாசு வெடித்து ஏற்பட்ட விபத்தில் 15 வயது சிறுவன் உயிரிழந்தான். மேலும் அந்த விபத்தில் 9 பேருக்கு காயம் ஏற்பட்டது.
விக்கினம் இல்லாத கடவுளா இது?
இதனையடுத்து ஊர்வலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் விபத்து ஏற்பட்ட விநாயகர் சிலை ஊர்வலம் ஏற்பாடு செய்தவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.