நாகர்கோவில், ஆக. 31- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக கலைவாணர் அவர்களுடைய நினைவு நாளான நேற்று (30.8.2025) நாகர்கோவிலில் உள்ள கலைவாணர் சிலைக்கு மாவட்ட கழகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கழக தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் மு.இராஜசேகர், மாநகர தலைவர் ச.ச.கருணாநிதி செயலாளர் மு.இராஜசேகர், மாவட்ட துணைச் செயலாளர் சி.அய்சக் நியூட்டன், நகர செயலாளர் க.யுவான்ஸ் கழகத் தோழர் அர்ஜூன் மற்றும் பெரியார் பற்றாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்