வேலூர், ஆக 29 வேலூர் மாவட்டம் விருபாட்சிபுரம் காந்தி நகரை சேர்ந்தவர் ரமேஷ். சென்னை சைதாப்பேட்டையில் சலூன் கடை வைத்துள்ளார். இவரது மகன் சஞ்சய் (வயது 13). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான சஞ்சய், விருப்பாட்சிபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தான்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எருக்கம்பூ பறிப்பதற்காக நேற்று முன்தினம் (27.8.2028) மாலை 7 மணி அளவில் குப்பை மேடுகளில் வளர்ந்திருந்த எருக்கஞ்செடியில் பூ பறிக்கச் சென்றார், அப்போது புதரில் ஏதோ ஒன்று அவரது கையைக் கடித்துள்ளது. அருகில் உள்ளவர்கள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை சஞ்சய் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து பாகாயம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் சென்று சிறுவனின் உடலை மீட்டு உடற்கூராய்வு அனுப்பி வைத்தனர்.
எருக்கஞ்செடி பெரும்பாலும் குப்பைகளில் அடத்தியாக வளர்ந்திருக்கும் நச்சுத் தன்மை கொண்ட அந்தச்செடியைச் சுற்றி பாம்பு உள்ளிட்ட பல நச்சுத்தன்மை கொண்ட உயிரினங்கள் வாழும், இந்த நிலையில் சிறுவன் பிள்ளையார் சதுர்த்திக்காக எருக்கம்பூ பறித்ததால் விஷவண்டு கடித்து இறந்துள்ளார்.