எந்தச் சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள், தீண்டப்படாதவர்கள் இருக்கிறார்களோ அந்தச் சமூகத்தை முற்போக்கான ஒரு சமூகம் என்று யாராவது கருதுவார்களா? அப்படிக் கருத முடியுமா? ஒரு சமூகத்தின் பெரும் பகுதி தாழ்த்தப்பட்டிருப்பது உண்மையிலேயே அந்தச் சமூகத்திற்கு ஒரு பெரிய கேடு – அக்கேட்டை மறைத்து வைப்பதாலோ அல்லது அச்சமூகத்தில் சிறு மாற்றங்கள் செய்து விடுவதாலோ அக்கேடு மறைந்து விடுமா? அக்கேட்டிற்குக் காரணமான தத்துவம், அதற்கேற்ற மதம், சாத்திரங்கள், புராணங்கள், இதிகாசங்கள், கடவுள்கள், இவற்றிற்கான அறிகுறிகள், இவற்றைச் சுய நலக் காரணமாகப் புகட்டி வருபவர்கள், ஆதரித்து வருபவர்கள் ஆகிய இவைகள் அத்தனையும் அழிக்கப்பட்டாலன்றி – அக்கேடும், அச்சமூகத்தின் முற்போக்குத் தடையும் எப்படி நீங்கும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’