ஆவடி, ஆக. 26 அம்பத்தூரில் குடும்பப் பிரச்சினைகளைத் தீர்க்க பரிகார பூஜை செய்வதாகக் கூறி, பெண்ணிடம் நகை யைத் திருடிய வழக்கில் கோயில் பூசாரியை காவல் துறையினர் கைது செய்தனர்.
அம்பத்தூர் ஆசிரியர் காலனியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி சகிலா (வயது 55). இவர் அம்பத்தூர் எம்கேபி நகரில் உள்ள நாகாத்தம்மன் கோயிலுக்குச் செல்வது வழக்கமாம். இந்த நிலையில், அங்குள்ள கோயில் பூசாரி லோகேசிடம் தனது குடும்பப் பிரச்சினைகளைக் கூறிய போது, அவர் ‘உங்கள் வீட்டில் செய்வினை உள்ளது. பரிகார பூஜை செய்தால் பிரச்சி னைகள் தீரும்’ எனக் கூறினாராம். இதை நம்பிய சகிலா, கடந்த ஜூன் மாதம் பூசாரி லோகேசை வீட்டிற்கு வர வழைத்துப் பரிகார பூஜை செய்துள்ளார்.
அப்போது அவர் சகிலா அணிந்தி ருந்த தங்க நகையை, அவர் வைத்தி ருந்த பூஜை கலசத்தில் போடச் சொன்னாராம். இதையடுத்து சகிலா, இரண்டு தங்கச் சங்கி லிகள், மோதிரம் என 5 பவுன் நகையை கலசத்தில் போட்டுள்ளார். பின்னர், கலசத்தில் உள்ள நகையை நான் கூறும்போது திறந்து எடுக்க வேண்டும் என லோகேஷ் கூறினாராம். இதையடுத்து, கலசத்தை சகிலா பூஜை அறையில் பத்திரமாக வைத்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு நகை தேவைப்பட்டபோது, பூசாரி லோகேசிடம் நகையை எடுக்கலாமா? என சகிலா கேட்டுள்ளார். அப்போது அவர் நீங்களே கலசத்தை திறந்து நகையை எடுத்துக்கொள்ளுங்கள் எனக் கூறினாராம்.
கவரிங் நகை
இதையடுத்து சகிலா கலசத்தில் இருந்த நகையை எடுத்து சோதனை செய்தபோது, அதிலிருந்தவை கவரிங் நகை எனத் தெரியவந்தது.
இது குறித்து சகிலா அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமார் தலை மையில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
பின்னர், தலைமறைவாக இருந்த லோகேசை (வயது 26) 23.8.2025 அன்று கைது செய்தனர். அவர் கொடுத்த தகவ லின்பேரில், அவரிடமிருந்து 2 பவுன் தங்க நகைகளைக் காவல் துறை யினர் பறிமுதல் செய்தனர்.