அறந்தாங்கி கழக மாவட்டம்ஆலங்குடியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா விளக்க பொதுக்கூட்டம் மாவட்ட துணைத்தலைவர் இளங்கோ தலைமையில் நடைபெற்றது. பெரியார் வீர விளையாட்டு கழக மாநில அமைப்பாளர் கறம்பக்குடி முத்து வரவேற்புரை நிகழ்த்தினார். பகுத்தறிவாளர் கழகபொறுப்பாளர் மாதவன், மாவட்ட தலைவர் க மாரிமுத்து ஆகியோர் உரைக்குப்பின் மாநில மாணவர் கழக செயலாளர் செந்தூரபாண்டியன் உரை நிகழ்த்தினார். இறுதியாக கழக பேச்சாளர் தேவ.நர்மதா சிறப்புரையாற்றினார்.