22.8.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* சிறுபான்மையினருக்கு ஆதரவாக திமுக எப்போதும் இருக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்.
* கைது செய்யப்பட்டு 30 நாட்கள் காவலில் இருந்தால் முதலமைச்சர் உள்ளிட்டோரை பதவி நீக்கம் செய்யும் மசோதா ஜனநாயகத்துக்கு விரோதமானது, தலையங்கம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* இன்று அவசரம் அவசரமாக வாக்காளர் சிறப்பு திருத்தம் செய்யும் தேர்தல் ஆணையம் 2002-2003 ஆம் ஆண்டில், பீகார், ஜார்க்கண்ட், உத்தரகண்ட், உத்தர பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் ஆகிய ஏழு மாநிலங்கள் இந்த செயல்முறையை முடிக்க எட்டு மாதங்கள், இப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக எடுத்துக் கொண்டன.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் ஆளுநர் அமர்ந்தால் நீதிமன்றங்கள் தலையிட அதிகாரம் இல்லாமல் இருக்குமா: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி.
தி இந்து:
* மக்களின் வாக்குகளை திருடுபவர்கள் அரியணையை விட்டு இறங்கி பதவி விலக வேண்டும் என்று பீகார் பேரணியில் ராகுல் காட்டம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ‘‘2018 முதல் 3 சுழற்சிகளில் (2018, 2021, 2023) பல்வேறு அரசுத் துறைகளில் இதுவரை 63 நேரடி நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போது பல்வேறு அமைச்சகங்கள், துறைகளில் 43 அதிகாரிகள் பதவியில் உள்ளனர். நேரடி நியமன முறை மூலம் செய்யப்படும் நியமனங்களில் இடஒதுக்கீடு பொருந்தாது’’ மாநிலங்களவையில் ஒன்றிய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்.
– குடந்தை கருணா