புதுடில்லி, ஆக.22 இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி சி.பி. ராதா கிருஷ்ணனுக்குப் போட்டி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இருவரும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்தத் தேர்தல் “தெற்குக்கும் தெற்குக்கும் இடையிலான மோதல்” என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ‘இந்தியா’ கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஆகஸ்ட் 23 அன்று தமிழ்நாட்டிற்கு வரவுள்ளார். அவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து தனது வேட்பு மனுவுக்கு ஆதரவு கோர உள்ளார். மேலும், மாநிலத்தில் உள்ள ‘இந்தியா’ கூட்டணியின் மற்ற கட்சித் தலைவர்களை யும் அவர் சந்தித்து ஆதரவு திரட்ட இருக்கிறார்.