லக்னோ, ஆக.21 உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள உணவகத்தில் காவி உடை அணிந்த நபர் கோழிக்கறி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இதைக் கண்ட ஹிந்து அமைப்பினர் அவரைத் தாக்கி இழுத்துச்சென்றனர். இந்தக் காணொலி தற்போது சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.
உத்தரப் பிரதேசம் தலைநகர் லக்னோவில் உள்ள கோசாய்கஞ்ச் பகுதியில் சாலை ஓர உணவகம் ஒன்று உள்ளது. அங்கு காவி உடை அணிந்த நபர் கோழி பிரியாணி வாங்கி சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்.
காவி உடை அணிந்த இளைஞர் கோழிக்கறி சாப்பிடுவதைப் பார்த்த ஹிந்து அமைப்பினர் அவரிடம் சென்று ‘நீ ஹிந்துவா’ ஏன் காவி உடை அணிந்துள்ளாய் ஹிந்து என்றால் இறைச்சி சாப்பிடுவது ஏன் என்று கேள்வி கேட்டு வாக்குவாதம் செய்தனர்
ஆனால், அந்த இளைஞர் அதை ஏற்க மறுத்ததால்,அவர்கள் வெளியே சென்று மேலும் சிலரை அழைத்துவந்தனர் அப்படி வந்த இருவர் அந்த இளைஞரைத் தாக்கும் கட்சிப் பதிவும் வெளியாகியுள்ளது. அதில் சிலர் அந்த இளைஞரைத் தாக்குவதையும், உணவு விடுதி ஊழியர்கள் தாக்குதலைத் தடுக்காமல் வேடிக்கைப் பார்த்தனர். பின்னர் அவரை அந்த கும்பல் உணவு விடுதியிலிருந்து இருந்து வெளியே இழுத்துச் சென்றது.
தாக்குதல் சம்பவம் தாபாவில் இருந்த சிசிடிவி கேமராவில் முழுவதுமாகப் பதிவானது. இந்தச் சம்பவத்தால் தாபா உணவகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேரு எங்கே, மோடி எங்கே?
நேரு இந்தியாவை
2 முறை பிரித்தாராம்
2 முறை பிரித்தாராம்
பிரதமருக்கு பிரியங்கா பதிலடி
புதுடில்லி, ஆக.21 இந்தியாவின் முதல் பிரதமர் நேரு மீது இந்நாள் பிரதமர் மோடி மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.
நேற்றுமுன்தினம் (19.8.2025) நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்றக் கூட்டத்தில் பிரதமர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.
கூட்டத்தில் பேசிய மோடி, “நேரு நாட்டை ஒரு முறை அல்ல, இரண்டு முறை பிரித்தார். முதலில் ராட்க்ளிஃப் கோடு மற்றும் பின்னர் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் மூலம், அவர் நாட்டிற்கு சேதம் விளைவித்தார்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் சிந்து நதியின் 80 சதவீத நீர் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் எந்த நன்மையையும் தரவில்லை என்று நேருவே தனது செயலாளரிடம் தனது தவறை ஒப்புக்கொண்டார். இந்த ஒப்பந்தம் முற்றிலும் விவசாயிகளுக்கு எதிரானது.
அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பேச்சு சுதந்திர உரிமையை நசுக்க நேருவின் ஆட்சிக் காலத்தில் அரசியலமைப்பு திருத்தப்பட்டது.
காங்கிரஸ் அரசு பின்தங்கிய வகுப்பினரின் வளர்ச்சிக்கு ஒருபோதும் பாடுபடவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் கீழ் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறுவதற்கான நடவடிக்கைகளை நாடு எடுத்து வருகிறது” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் பிரியங்கா காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், “11 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு, தனது பொறுப்புகளில் இருந்து தப்பிக்க நேருவை மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டி வருகிறது.
கடந்த காலத்தை தோண்டி எடுப்பதை நிறுத்திவிட்டு, நிகழ்காலத்தில் நடக்கும் விஷயங்களுக்கு பதிலளிக்க வேண்டும்.
‘வாக்கு திருட்டு’ குற்றச்சாட்டுகள் குறித்து நீங்கள் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்? நீங்கள் மக்களுக்கு பொறுப்புடன் பதிலளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.