புதுடில்லி, ஆக.21 – வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செப்புத் தகடுகள் வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்-டுள்ளதா? என்று வேலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த் மக்களவையில் கேள்வி எழுப்பினார்.
அவரது கேள்விகள் வருமாறு:
கல்வெட்டுகள்
இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை (ASI) மற்றும் தமிழ்நாடு மாநில தொல்பொருள் துறையால் தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பண்டைய மன்னர்கள் / ஆட்சியா ளர்களின் சில வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த செப்புத் தகடுகள் வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் வைக்கப் பட்டுள்ளதா? அப்படியா னால், அவற்றின் விவரங்கள் மற்றும் தென்னிந்தியாவில் காணப் படும் மொத்த செப்புத் தகடுகளின் எண்ணிக்கை, அரசு வம்சாவளி வாரியாக தருக. அவை பாதுகாக்கப் படும் அருங்காட்சியகங்கள் யாவை?
தென்னிந்தியாவில் காணப்படும் 1.5 லட்சம் பழங்காலக் கல் வெட்டு களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கி.மு. 200 முதல் கி.பி. 1800 வரை யிலான தமிழ் மொழியில் உள்ளன என்பது உண்மையா? அப்படியானால், வேலூர் மக்கள வைத் தொகுதிக்குட்பட்ட பகுதி யில் காணப்படும் வரலாற்று முக் கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுகள் உட்பட அதன் விவரங்கள் தருக.
இந்திய தொல்லியல் துறை யின் கல்வெட்டுப் பிரிவு, சுதந் திரத்திற்கு முன்னும் பின்னும் பல எபிகிராஃபிகா இண்டிகா தொகுதிகளையும் தென்னிந்திய கல்வெட்டுகள் தொடர்களாக வெளியிட்டுள்ளதா? அப்படியா னால், அதன் விவரங்கள் மற்றும் எபிகிராஃபிகா இண்டிகாவின் கடைசி தொகுதி மற்றும் தென் னிந்திய கல்வெட்டுகளை ASI வெளி யிட்ட தேதி என்ன?
இவ்வாறு அவர் கேள்விகள் கேட்டிருந்தார்.
தமிழ் எழுத்து
அதற்கு ஒன்றிய அரசின் கலாச் சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத் எழுத்துப் பூர்வமாக அளித்த பதில் வருமாறு:–
தமிழ்நாட்டில் இந்திய தொல் பொருள் ஆய்வு மயயம் (ASI) கண்டு பிடித்த செப்புத் தகடு கல்வெட்டுகள் எதுவும் வெளிநாடு களில் உள்ள அருங் காட்சியகங்களில் வைக்கப்படவில்லை.
இந்திய தொல்லியல் துறையால் நகலெடுக்கப்பட்ட மொத்த கல்வெட்டுகளின் எண்ணிக்கை சுமார் 73,732 ஆகும். அவற்றில் 26,416 தமிழ் எழுத்துக்களில் உள்ளன. வேலூர் மக்களவைத் தொகுதியில் காணப்படும் வரலாற்று கல்வெட் டுகள் உட்பட இந்தக் கல்வெட் டுகள், இந்திய கல்வெட்டு குறித்த ஆண் டறிக்கைகளில் புரிந்து கொள்ளப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
இந்திய தொல்லியல் துறை எபிகிராஃபியா இண்டிகா மற்றும் தென்னிந்திய கல்வெட்டுகளின் பல தொகுதிகளை வெளியிட்டுள்ளது. எபிகிராஃபியா இண்டிகாவின் சமீபத்திய தொகுதி 2012–இல் வெளியிடப்பட்டது மற்றும் தென்-னிந்திய கல்வெட்டுகள் 2025–இல் வெளியிடப்பட்டன.
தென்னிந்திய கல்வெட்டுகளின் 45 தொகுதிகளில், 18 தொகுதிகள் சுதந்திரத்திற்கு முன்பு வெளியிடப் பட்டன, மீதமுள்ள 27 தொகு திகள் சுதந்திரத்திற்குப் பிறகு வெளி யிடப்பட்டவை.
இவ்வாறு அமைச்சர் தனது பதிலில் கூறியுள்ளார்.