திருச்செந்தூர், ஆக. 21 திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆவணித் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று (20.8.2025) வெற்றிவேர் சப்பரத்தில் சாமி சண்முகனுக்கு, தங்கம் மற்றும் வைர ஆபரணங்களால் அலங்காரம் செய்வதில் திரிசுதந்திர ஸ்தலத்தார் சபா நிர்வாகிகளுக்கும், சிவாச்சாரியார்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.
கோவில் நிர்வாக அனுமதி பெற்ற சிவாச்சாரியார்கள் மட்டும் சாமிக்கு சாத்தக்கூடிய நகைகளை பெற்றுக் கொள்ளுமாறு திரிசுதந்திர ஸ்தலத்தார் சபா நிர்வாகிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சிவாச்சாரியார்கள் தரப்பில், சாமி சப்பர வீதி உலாவில் கூடுதல் நபர்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த பிரச்சினையை தவிர்ப்பதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
சுமார் 4 மணி நேர பேச்சு வார்த்தைக்கு பின்னர் சுமுகமான முடிவு ஏற்பட்டது. கோவில் நிர்வாகம் சார்பில் 12 சிவாச்சாரியார்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
பின்னர் சிவாச்சாரியார்களிடம் நகை கள் ஒப்படைக்கப்பட்டு சாமிக்கு அணி விக்கப்பட்டது. இதனால், காலை 9 மணிக்கு சண்முக விலாசம் மண்டபத்திற்கு வரக்கூடிய சாமி சண்முகன் மதியம் 1.45 மணிக்கு வந்தானாம்.