கம்யூனிஸ்ட் கட்சிகளை விமர்சிக்கும் தகுதி இபிஎஸ்-க்கு இல்லை என சிபிஅய் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். சேலத்தில் சிபிஅய் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இபிஎஸ் நேர்மையாக இருந்தால் அரசியல் பேச வேண்டும். அதைவிடுத்து அவதூறு பொழியக் கூடாது என்றார். கம்யூனிஸ்ட் கட்சியை தேய்ந்து போன கட்சி என விமர்சிக்கும் அவர், கூட்டணிக்காக மட்டும் எதற்காக ரத்தினக் கம்பளம் விரிப்பதாக கூறுகிறார் என்றார்.
கட்சி மாறிய அ.தி.மு.க.வினர்
அ.தி.மு.க.வில் இருந்து சிலர் திமுகவுக்கு படையெடுத்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க சங்கரன்கோவில் நகராட்சித் தலைவர் மறைமுக தேர்தலில் அதிமுக கவுன்சிலர்கள் 6 பேர் திமுகவுக்கு ஓட்டு போட்டது அரசியலில் அதிர்வலைகளை ஏற்ப டுத்தியுள்ளது. கடுப்பில் உள்ள அதிமுக தலைமை, அந்த 6 கருப்பு ஆடுகளை கண்டறிய உத்தர விட் டுள்ளதாம். தென் மாவட்டங்களில் அதிமுக வாக்கு வங்கியை உடைக்க திமுக முயன்று வருவது கவனிக்கத்தக்கது.
ஆகஸ்ட் 20: வரலாற்றில் இன்று
1858 – சார்லஸ் டார்வின் தனது பரிணாம வளர்ச்சிக் கொள்கையை வெளியிட்டார்.
1975 – நாசா வைக்கிங் 1 என்ற விண்கலத்தை செவ்வாயை நோக்கி ஏவியது.
1977 – நாசா வாயேஜர் 2 விண்கலத்தை ஏவியது.
மத நல்லிணக்க நாள் இன்று.